பக்கம்:அருமையான துணை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அருமையான துணை அந்தப் பெரிய மனிதர் வீட்டுக்குப் போகாதே. அங்கே போய் சேட்டை பண்ணுதேன்னு சொன்னேன இல்லையா? நீ அங்கே போயி என்னட்டி பண்ணுனே?’ என்று வெடுவெடுத்தார். அதுல்லாம் ஒண்னுமிராது ஐயா. முதலாளி ஏளுே உங்களை கையோடு அழைச்சிட்டு வரச் சொன்னங்க’ என்று கூறி, வேலையாள் முன்னே நடந்தான். சிறு மனப்பதைப்புடன் அவர் பின்னல் போளுர், உஷாவும் கு தி த் து க் கொண் டு உடன் நடந்தாள். தாத்தாவை பார்க்கப் போறியா? அந்தத் தாத்தாவை உனக்கு முன்னுடியே தெரியுமா?’ என்று தன் இயல்புப்படி சளசளத்துச் சென்ருள். என்னவோ ஏதோ...ஏன் இப்படி வழக்கமில்லாத முறையிலே கூப்பிட்டு அனுப்பியிருக்கார் என்று சந்தேகங் களே வளர்த்தபடி நடந்த தந்தைக்கு எரிச்சலாக இருந்தது அவள் போக்கு. பேசாம வாயை மூடிக்கிட்டு வரமாட்டே?” என்று அதட்டல் போட்டார் மகளைப் பார்த்து. அவர் பயந்தபடி ஒன்றுமில்லே. புன்னவனம் அன்புடன் அவரை வரவேற்ருர். ஒரு நாற்காலியில் உட்காரும்படி உபசரித்தார். அவர் தான் பணிவுடன் வணங்கி, மரியாதை காட்டி ஒதுங்கி நின்ருர். கம்மா உட்காரப்பா' என்று கிசுகிசுத்தாள் உஷா. "இன்னிக்கு உஷாவுக்குப் பிறந்த நாளா? காலையிலே உஷா சொல்லப் போய்த்தான் தெரியும் என்று புன்னவனம் ஆரம்பித்தார். ஆமாங்க, அஞ்சு போயி ஆறு வருது. இனிமேல்தான் ஸ்கூலிலே சேர்க்கனும், ஆருவது வயசு வந்தாத்தான் சேர்த்துக்கிட மு டி யும் னு கார்ப்பரேஷன் ஸ்கூலிலே சொல்லிட்டாங்க என்று தேவை இல்லாத விவரங்களைக் கூறிஞர் தந்தை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/131&oldid=738691" இலிருந்து மீள்விக்கப்பட்டது