பக்கம்:அருமையான துணை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமையான துணை 贾密器 உஷா கெட்டிக்காரி. புத்திசாலி. பள்ளிக்கூடத்துக்குப் போகாமலே அவள் எவ்வளவோ விஷயங்கள் கற்று வச்சிருக்கா...' நான் உனக்கு எத்தனையோ கதைகள்லாம் சொன் னேன்லா' என்று பெருமையோடு இழுத்தாள் உஷா. நீ ” . . . سا مصلى الله عليه وسلم ஏட்டி, மரியாதையாப் பேசனும். அவங்களை நீ என்கக்கூடாது. நீங்கன்னு சொல்லணும். அவங்க எவ்வளவு பெரிய மனுவுரு . . . . "தாத்தா ஒண்னும் பெரிய மனுசரு இல்லே. நம்மை மாதிரி.. , . அப்பாவுக்கு ஆத்திரம், குழப்பம். தாக்கைத் துருத்திக் கொண்டு பிள்ளையை அடிக்கப் போளுர். புன்னவனம் தான் அவசரமாகத் தடுத்தார். ஐயா சந்திரசேகரன், உஷா சின்னப்புள்ளெதானே. அதுக்கு இந்த வித்தியாசங்கள் எல்லாம் என்ன தெரியும் குழந்தை இயல்பின்படி பேசிப் பழகுது. அதேைலதான் எனக்கு அதை முதல் முறையே பிடித்துவிட்டது. இப்ப ஒரு ஒன்றரை மாசமா நான் சந்தோஷமா இருக்கிறேன்ன அதற்கு உஷா தான் காரணம். உஷா எனக்குத் துணையாக இங்கே வந்து, தினசரி பொழுது போக்கத் தொடங்கியதிலிருந்து நானே புது மனுஷன் ஆயிட்டேன். அதுக்காக என் நன்றியைத் தெரிவிக்கிற முறையிலும், அவள் பிறந்த நாள் வாழ்த்துக் களோடு ஒரு அன்பளிப்பாகவும், இதை கொடுக்கணுமின்னு தான் உங்களே அழைத்துவரச் சொன்னேன். உஷாவிடமே கொடுக்கலாம்னு தான் நினைத்தேன். அவள் வாங்கிக்கொள்ள மாட்டேன்பா. அப்படியே வாங்கிக்கொண்டாலும், நீங்களும் அவள் அம்மாவும் அவளே கண்டித்துக் கட்டுப்பாடு பண்ணு வீங்க என்று எண்ணி, உங்களிடமே விஷயத்தைச் சொல்வி இதைக் கொடுக்க விரும்பினேன், இந்தாங்க என்று பரிசுப் பொருளைக் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/132&oldid=738692" இலிருந்து மீள்விக்கப்பட்டது