பக்கம்:அருமையான துணை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அருமையான துணை

கிறார்கள். மக்கள் சொத்திழந்து, வீடிழந்து சொந்த நாட்டை விட்டு அகதிகளாக ஓடிவந்துகொண்டே இருக்கிறார்கள்--இவை போன்ற செய்திகள் அவனே பித்துப் பிடித்தவன்போல் ஆக்கிவிடும்.

தலைமயிரைப் பிய்ப்பதுபோல் கை விரலால் உருவிக் கொண்டு, 'சே, இதெல்லாம் ஏன் இப்படி நடக்கு? இதுக்கு என்ன பண்ணுவது? ஏதாவது பண்ணியாகணுமே!’ என்று முணுமுணுத்தபடி இருப்பான். அவ்வேளைகளில் அவன் ஒரு வேடிக்கை மனிதன் ஆகவே மற்றவர்களுக்குத் தோன்றினான்.

மனிதர்களுக்காக மட்டும்தான் அவன் மனம் நொந்தான் என்றில்லை. சாக்கடையில் புரண்டுவிட்டு, தெருவில் அசிங்கக் கோலம் தீட்டியவாறு அசைந்து நடக்கும் பன்றிகளுக்கும். கோபத்தை பல்லில் காட்டி வெறியை உறுமலில் தேக்கி, ஒன்றோடொன்று கவ்விக் கடித்துச் சண்டைபோடும் தெரு நாய்களுக்காகவும் அவன் அனுதாபப்பட்டான். ‘இதெல்லாம் ஏன் இப்படி இருக்கு?' என்று வருந்தனன்.

கொடிகளில், செடிகளில், இனிமையாய் குளுமையாய் பூத்துக் குலுங்கவேண்டிய மலர்கள் செடி அருகில் உதிர்ந்தும் அடிபட்டுத் தெருப் புழுதியில் புரண்டும் அலைக்கழிவதைக் கண்டும் அவன் உள்ளம் உருகி வருந்தினான்.

இரக்கத்தின், கருணையின் ஊற்றாக இருந்தது அவன் உள்ளம். அவனே அனுதாபம் எனும் உணர்ச்சியின் உயிர் உருவமாகத் திரிந்து அல்லாடினான். அவனை, அவன் உள்ளத்தை, உணர்ச்சியின் தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அவன் வழியில் வந்து சேரவேயில்லை; பாவம் !

அன்று. . .

காலை நேரம் ரசிக்கப்பட வேண்டிய அற்புதக் காவியமாக மலர்ந்து கிடந்தது. விண்ணும், மண்ணும், இளம் ஞாயிற்றின் பொன்னொளி தொட்ட இடங்களும் பொருள்களும் இனியனவாய், எழில் சேர்ந்தனவாய் மிளிர்ந்தன. பூக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/25&oldid=970563" இலிருந்து மீள்விக்கப்பட்டது