பக்கம்:அருமையான துணை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுதாபம்

17

சிரித்த செடிகொடிகள் தனி அற்புதம். வண்ணமயமான விதவிதப் பூக்கள் குளுமைக் காட்சிகள்.

அவன் உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பு. புதிதாய்ப் பிறந்து விட்டவன்போல், அவன் தனியொரு உவகைத் துடிப்புடன் தெருவில் நடந்துகொண்டிருந்தான். எதன் மீதோ ஏறி எங்கோ மிதந்து பறப்பது போன்ற உணர்வுடன் நடந்தான்.

நடு ரஸ்தாவில் ஒரு பூ கிடந்தது.

இரண்டு இலைகளைக்கொண்ட ஒரு அழகு ரோஜா, புதுமையாய் சிரித்தது. ஸ்கூட்டரின் பின்புறம் ஜம்மென அமர்ந்து அவசரமாக எங்கோ சென்ற எவளின் கூந்தலையாவது அழகுபடுத்திக் கொண்டிருக்க வேண்டிய மலர். அப்படி இருந்து, வேகத்தில்-உலுக்கலில், அவளறியாமலே அது நடுத்தெருவில் விழுந்திருக்க வேண்டும்.

'இந்த அழகுக்கு இப்படி ஒரு முடிவு ஏன்? இது சரியில்லையே!' என்றது அவன் மனம். அழகின் சிரிப்பு அவனை இழுத்தது. அதற்காக, அதன் பரிதாப நிலைக்காக, அனுதாபம் கொண்ட அவன் அதை அப்படியே விட்டுவிட விரும்பாதவனாய், பூவை எடுக்கக் குனிந்தான். தனது உணர்வும், தன் கருமமும், தானுமாய் ஆகிவிட்ட அவன் சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தானில்லை.

வெகுவேகமாக வந்த கார் ஒன்று அவனை மோதியது. தள்ளியது. ஏறியது. கோபத்தால் உறுமிக்கொண்டு மேலும் வேகமாய் முன்னேறிப் பாய்ந்தது. புழுதியை வாரி இறைத்துக்கொண்டு சடக்கென ஒரு திருப்பத்தில் ஓடி மறைந்தது.

அதை ஒட்டியவர் அவசர உலகத்தின் மிக அவசரமான பிரதிநிதி. மனிதாபிமானமோ, உயிர்களிடம் இரக்கமோ, ஊறா' எனும் மிருக உள்ளுணர்வு துடிப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அது அவர் இயக்கிய காரையும் பற்றிக் கொண்டதில் வியப்பில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/26&oldid=968935" இலிருந்து மீள்விக்கப்பட்டது