பக்கம்:அருமையான துணை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்திசாலி

23

இந்த நாட்டில் தழைத்தோங்கும் ‘குடிசைத் தொழில்’ ஆகிவிட்ட ‘அரிஷ்டம்’ உற்பத்தியை, பழரசம் தயாரிப்பை, அவனும் உரிய ஒரு வாத்தியார்’ மூலம் கற்றுக்கொண்டான். தீவிர உற்பத்தியில் ஈடுபட்டான். தேவையான லைசென்ஸ் வாங்கிக்கொண்டு, முக்கிய இடம் ஒன்றில் ‘பார்மசி'யைத் திறந்து வைத்தான்.

‘அருமையான பிஸினஸ். தண்டர் ஸேல்ஸ் தான்' என்று அவனே அகமகிழ்ந்து போனான் முதல் வருஷத்தின் ஆரம்ப மாதங்களிலேயே.

அப்புறம் என்ன? கட்டிடம் சொந்தம் ஆயிற்று. இன்னும் சில இடங்களில் பிராஞ்சுகள். இரண்டு பங்களாக்கள், ‘நம்ம ஒய்ஃப் லட்சுமிக்கு ஒண்ணு: லைய்ப் விஜயாவுக்கு ஒண்ணு!’ என்று பெருமையோடு பேசினான் அவன்.

காரும் வாங்கி விட்டான்.

'மக்களின் சேவை மகேசனின் சேவை. சும்மாவா சொன்னான் மக்களுக்கு எது தேவையோ அதைக் கொடுப்போம். மக்கள் நம்மை வாழவைப்பார்கள். திருவள்ளுவர் பார்மசிக்கு இன்னும் சில பிராஞ்சுகள் ஒப்பன்பண்ணியாகனும்' என்று அவன் முழக்கம் செய்வது சகஜமாகி விட்டது.

அவனைக் காணச் செல்லும் நண்பர்களைப் பிரமாதமாக உபசரித்தான். கண்டு பேச வந்தவர்களுக்கு அல்வாவும், மிக்ஸரும், காப்பியும் சப்ளை செய்தான்.

‘நீங்க திருவள்ளுவர் தினத்தன்று வந்திருக்கனும், அண்ணாச்சி, ரொம்ப கிராண்டு போங்க! திருவள்ளுவர் முக்தி அடைஞ்ச நாளைக் கொண்டாடணும்னு சில புலவர்கன் சொன்னங்க. கூடாது; அவர் பிறந்த நாளைத்தான் கொண்டாடணுமின்னு வேறு சில அறிவாளிகள் சொன்னங்க. மாட்டுப் பொங்கல் நாளே திருவள்ளுவர் தினமாக்குங்கன்னு: நாட்டுக்கு அறிவிப்பு விடுத்திருக்குது அரசு. நமக்கெதுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/32&oldid=970570" இலிருந்து மீள்விக்கப்பட்டது