பக்கம்:அருமையான துணை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அருமையான துணை

வீண் பொல்லாப்பு! நான் மூன்று நாளையுமே கொண்டாடுறதை வழக்கமாக்கிப் போட்டேன்’ என்று சொல்லி, அட்டகாசமாய்ச் சிரிப்பான் சுயம்பு.

அபிப்பிராய பேதம் என்பது அபிப்பிராயம் என்கிற ஒன்று இருக்கிற வரை இருந்துக்கிட்டே தான் இருக்கும் அண்ணாச்சி! பேதங்களை ஒழிக்கணும்னு சொன்னா, சகல அபிப்பிராயங்களையும் ஆதரிப்பது ஒன்றுதான் வழி. அதையே தான் நான் செய்வது!' என்று அவன் ஒலிபரப்பத் தவறுவதும் இல்லே.

இப்போது அவனைப் பற்றி அபிப்பிராய பேதங்கள் அழவேயில்லை. ‘சுயம்புலிங்கமா? அவன் தான்யா பிழைக்கத் தெரிந்த புத்திசாலி!' என்றே எல்லோரும் சொன்னர்கள்.

'தீபம்’, ஏப்ரல் 1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/33&oldid=970607" இலிருந்து மீள்விக்கப்பட்டது