பக்கம்:அருமையான துணை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛登 அருமையான துணை அனந்த பெருமாளோடு எப்பவாவது பேசிப் பழகும் திருமலைக்கொழுந்துவுக்கு, இவன் ஏன் இப்படி இருக்கிருன்? ல்லாரையும் மட்டம்தட்டிப் பேசுவதிலும், ஒருத்திகூட ழுங்கானவள் இல்லை என்று அடித்து விளாசுவதிலும் 龛 ஒ இவனுக்கு ஏன் இவ்வளவு திருப்தி: யாரிடம் பேச்சு கொடுத் தாலும் இவன் இதே தன்மையில் தான் பேசுகிருன். இது ஏனே? என்ற சந்தேகம் எழுந்தது. . அவன் பிறவிக்குணம் அது என்று சுலபமாகச் சொல்லி விடலாம். ஆளுல் அதைவிட அந்தரங்கமான-ஆழமானகோளாறு எதுவும் அவன் உள்ளத்தைப் பற்றிக்கொண் டிருக்கக்கூடும் என்ற எண்ணமும் திருமலைக்கொழுந்துக்கு ஏற்பட்டது. ஒருநாள் அவன் அணைந்த பெருமாள் வீட்டுக்குப் போக தேர்ந்தது. வீட்டினுள் நுழைவதற்கு முன்பே, பெரும் சத்தம் அவன் காதைத் தாக்கியதால் திருமலை வெளியிலேயே நின்றுவிட்டான். அனஞ்ச பெருமாளின் மனைவி குழல்வாய்மொழி தான் காட்டுக் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள். மரியாதை இல்லாமல் கத்தினுள். நீரு ஒரு ஆம்பளையா? சம்பாதிக்கத் துப்பு இல்லையே. அது என்ன செலவு இது என்ன செலவு என்று கணக்குக் கேட்கமட்டும் வாய் இருக்குதே! இது திருமலையின் காதில் விழுந்தது. அவள் மேலும் மோசமாக, கண்டபடி, தாக்கிப் பேசினுள். அணஞ்ச பெருமாள் கீச்மூச் சென்று குரல் கொடுக்கவே இல்லை. "சரி சரி. இப்போ நிலைமை சரியில்லை என்று நினைத்து, திருமலைக்கொழுந்து வந்த வழியே திரும்பிவிட்டான். அன்று மாலே அவன் பக்கத்து டவுனுக்குப் போயிருந் தான். அங்கே சினிமா தியேட்டர் பக்கம் பார்வையில் பட்ட ஜோடிகளில் ஒருத்தி அவன் கவனத்தைக் கவர்ந்தாள். "இவள் வந்து அணஞ்ச பெருமாள் பெண்டாட்டி அல்லவா!' என்று திடுக்கிட்டான். அவளே தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/49&oldid=738732" இலிருந்து மீள்விக்கப்பட்டது