பக்கம்:அருமையான துணை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாயம் 傘5 வுக்கு மறு பெயர் அது. ஆஸிட் என்பது எல்-எஸ்-டி. LS) லேஸெர்ஜிக் ஆஸிட் டைதிலாமைட். இப்போ இளைஞர் உலக முற்போக்குவாதிகள், ஹிப்பிகள், மண்ணகத்தில் வீண் னின்பம் பெற-விட்டு வி டு த லை யா கி விண்வெளியிலே பறக்கும் சுகத்தை அனுபவிக்க-இதுகளேத்தான் உபயோகிக் கிரு.ர்கள். அதை உபயோகித்தவர்கள் மாதிரியே தம்ம பிரதரும் நடந்துகொள்கிரு.ர். அது தான் கேட்கிறேன்" என்று உற்சாகமாகப் பேசினர். "நம்ம கைலாசம் அதுமாதிரிச் சரக்குகள் பக்கத்திலேயே போகமாட்டானே! என்ருன் நண்பர்களில் ஒருவனு.ை சோமு. இன்னொருவன் மூர்த்தி: அப்படியே இருந்தாலும், இங்கே எல் எஸ் டி இவனுக்கு எங்கே கிடைக்கும்?' என்று இழுத்தான். வாசுதேவ் துப்பாக்கி மாதிரி வெடித்துச் சிரித்தார். ஏன் கிடைக்காது? இதுவும் தான் பெரிய விட்டி ஆக வளர்ந்துட்டுதே. நம்ம விட்டியிலும் எல்லாம் கிடைக்கும். எத்தனையோ ஹிப்பிகள் வாருங்க, போருங்க. எவனேயாவது புடிச்சு, டியும் டிபனும் வாங்கித் தந்தால், அது கிடைச் சிட்டுப் போகுது என்ருர் . "நம்ம கைலாசம் அந்த மாதிரி வழிக்கெல்லாம் டே கக் கூடியவன் இல்லையே' என்று சோமு சொன்னன். 'எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருக்குமோ? ஒரே ரக வாழ்வு அலுத்துப் போயிருக்கலாம் பிரதருக்கு லேஃப்லே புது எக்ஸ்பெரிமெண்ட் ப ண் ணி ப் பார்க்கலாமேன்னு துணிஞ்சிருக்கலாம். மனுஷங்களைப்பற்றி திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியாது. யாரு எந்த நேரத்திலே எப்படி நடந்துக்குவாங்க? எவன் இன்ன வேளையிலே என்ன செய்வான் அல்லது செய்யமாட்டான் இன்னு எதையுமே கட் அன்ட் ரைட்டா சொல்லிப்போட முடியாக..." 'ஸார் ஸார், கைலாசத்தைப் பாருங்கி என்று மூர்த்தி கத்தவும், மற்றிருவரும் அங்கே கன் திருப்பினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/54&oldid=738738" இலிருந்து மீள்விக்கப்பட்டது