பக்கம்:அருமையான துணை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனது கதைகளுக்கான உந்துசக்திகள். இவற்றை ஆதாரமாக்கி நான் எழுதிய கதைகள் எண்ணற்றவை.

பலப்பல வருடங்களாக, பல்வேறு பத்திரிகைகளிலும், பிரசுரமான என் சிறுகதைகளில் பெரும்பாலானவை புத்தக வடிவம் பெறவில்லை. வெவ்வேறு சிலவே:

1. கல்யாணி முதலிய கதைகள்.
2. நாட்டியக்காரி.
3. வல்லிக்கண்ணன் கதிைகள்.
4. ஆண் சிங்கம்.
5. வாழ விரும்பியவன்.

இவை என்மீது அன்புகொண்ட நண்பர்களால் அவ்வப்போது வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்புகள்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது எனது ஆறாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. என்னிடம் மிகுந்த அன்பும் நட்புணர்வும் கொண்டுள்ள அருள்திரு. டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் அவர்களின் முன் முயற்சியினாலேயே இது சாத்தியமாகியுள்ளது.

இதில் உள்ள பன்னிரெண்டு கதைகளும் வித்தியாசமானவை. மனம் எனும் வலிய சக்தியின் பலவிதமான தன்மைகளைக் காட்டுகிறவை. மனசினாலும் உணர்ச்சிகளாலும் உந்தப்பட்டுச் செயல்புரிகிற வேடிக்கை மனிதரின் விந்தை நடவடிக்கைகளைக் காட்டுகின்ற கதைகள் இவை.

இவற்றைத் தொகுத்து அழகிய புத்தகமாக வெளியிடும் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்துக்கு என் தயா அவர்களின் அன்புக்கு வணக்கம். இக் கதைகளைத் தங்கள் பத்திரிகைகளில் வெளியிட்ட பத்திரிகை ஆசிரிய நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வல்லிக்கண்ணன்

iv

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/6&oldid=966429" இலிருந்து மீள்விக்கப்பட்டது