பக்கம்:அருமையான துணை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரியாத விஷயம் 57 சிவானத்தம் அவர்களின் தோட்டமே ஆகச் சிறந்தது: அழகானது; புதுமைப் பொலிவுடன் திகழ்வது; வளமாய் சீருடன் பேணப்படுவது என்று சான்றுரையும், முதல் பரிசான வெள்ளிக் கேடயமும் வழங்கினர்கள், அதற்கென அமைந்திருந்த குழுவினர். சிவானந்தம் பெ ரு ைமயோ டும் மகிழ்ச்சியோடும் அவற்றை ஏற்றுக்கொண்டார். தோட்டக்கார முத்துசாமி அடக்க ஒடுக்கமாய் கையை கட்டிக்கொண்டு, ஒரு ஒரத்தில் நின்றன். தற்செயலாக தோட்டத்தினுள் வந்திருந்த செல்லம் இதை எல்லாம் பார்த்தபடி நின்ருள்; பெரியவர்கள் பார்வையில் படாதவாறுதான். அப்புறம் அவள் தந்தையிடம், அதெல்லாம் என்ன? அவங்க ஐயாகிட்டே என்னமோ கொடுத்தாங்களே, அது என்ன என்று ஆவலோடு விசாரித்தாள். 'இந்தப் பட்டணத்திலேயே இந்தத் தோட்டம்தான் உசந்தது; ரொம்ப நல்லா இருக்கு கவனிச்சு பாதுகாக்கப் படுதுயின்னு சொல்லி பாராட்டினங்க. அதுக்காக ஐயாவுக்கு பணிக கொடுத்தாங்க-கேடயமும் சர்டிபிட்டும் (சர்டி பிகேட்) என்று சொல்வி மகிழ்ந்து போனன் முத்துசாமி. "இது என்னப்பா இது!’ என்று ஆச்சர்யப்பட்டான் செல்லம். சுற்றும் முற்றும் பார்த்தபடி, எதுடி? என்ன விஷயம்?" என்று திகைப்புடன் கேட்டான் தந்தை. 'இல்லே... வந்து. . .தோட்டத்திலே ஒ யாமப் பாடு பட்டது நீதானே? தண்ணி பாய்ச்சி, செடிகளை வாடாமல் காப்பாத்தி, அழகா நட்டுவச்சு நீதானே கவனிச்சு வளர்த்தே? தோட்டம் நல்லாயிருக்கும்படி செய்ய றது நீதானே? உனக்குத்தானே பரிசு தரணும்? ஐயா என்ன செஞ்சாடு: என்ன செய்ருரு? ஒரு இலையைக்கூட கிள்ளிப் போடுறதில்லே; மண்ணை கொத்துறது இல்லே. அப்படி இருக்கையிலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/66&oldid=738751" இலிருந்து மீள்விக்கப்பட்டது