பக்கம்:அருமையான துணை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密登 அருமையான துணே தாத்தா காலத்திலிருந்தே-அந்த ஊர் புதுப்பட்டி ஆகத் தான் இருந்து வருகிறது. அதற்கு அக்கம் பக்கத்தில் இரண்டு மூன்று புதுரர்கள் தோன்றிவிட்டன. ஒரு ஊர் சிவநகர்’ என்றுகூடப் பெயரைப் பெற்றுவிட்டது. அது நகரம் ஒன்று மில்லை. முப்பது நாற்பது குடிசைகளேக் கொண்ட சிற்றுரர் தான். என்ருலும், அதற்குப் புதுமையான பெயர் வேண்டும் என்று அநேக இளவட்டங்கள் தீர்மானித்தார்கள். அது "தகர்' ஆய்விட்டது:) இருந்தாலும், பிள்ளே அவர்களின் ஊர் இன்னும் பழைய பட்டி ஆகிவிடவில்லை . பெயரளவில். மூக்கபிள்ளை இன்னும் திமிர்ந்துதான் நடந்தார். கை தடிக்கம்பை கொண்டா என்று கேட்கவில்லை. கண்களுக்குக் கண்ணுடியின் உதவி தேவைப்படவில்லை. அவர் வாயில் பற்கள் இருந்தன. அவர் சீடை முறுக்கு பொருவிளங்காய் சி ஒன்பது மணிக்கு மேலே, யாரும் வீடுதேடி வர ங்க என்று உறுதிப்பட்டதும், இருட்டில், கட்டிலில் இத்தாைறே, கடமுடான்னு கடித்துத் தின்பார். தனியாகத் தின் திலே அவருக்கு எப்பவுமே இன்ட்ரஸ்ட்!" என்று ல் வாலிபப் பிள்ளையாண்டான்கள் பேசுவது வழக்கம். சவத்துப் பயலுகளுக்குப் பொறந்த வெறும் பயலுக. அவனுகளையும் யாரு திங்கவேண்டாமுன்னு?’ என்று மூக்க பிள்ளை முணமுணப்பதும் வழக்கம்தான். மற்றவர்கள் பேசுவது அவர் காதுகளையும் எட்டத்தான் செய்யும். அந்த ஊரின் ரகசியம் என்று எதுவும் கிடையாது. பெரியபிள்ளே இந்த வயசிலும் சீடை முறுக்குகளை எல்லாம் வெளுத்துக் கட்டுருரே? அவர் பல்லு நெசமான பல்லுதிாளு; இல்லே, கட்டிக்கொண்ட பொய்ப் பல்லா? என்ருெரு சந்தேகம் ஒரு சமயம் சில பேருக்கு ஏற்பட்டது. அது உண்மையான பல்லேதான் என்ற உறுதியும் பின்னர் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. 'இது அந்தக் காலத்து மண்ணுடேய்...வைரம் பாய்ஞ்ச கட்டையாக்கும்!’ என்று மூக்கபிள்ளை அடிக்கடி பெருமை யாகப் பேசுவார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/69&oldid=738754" இலிருந்து மீள்விக்கப்பட்டது