பக்கம்:அருமையான துணை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வை பேதம் 瓮星 சன்னத் தீவனமா தின்னுருக்கான் மனுசன்: உண்டவன் உரம் செய்வான்கிறது. சும்மாவா? சனிக்கிழமைதோறும் எண்ண தேய்ச்சுக் குளிப்பு. அன்று அருமையா உளுத்தங் களி களி இன்னு சொன்ன அதுதான் களி! பிரமாதமா இருக்கும். அதிலே நல்லெண்ணெய் மினுமினுண்ணு வழியும். பாலும் தயிரும் நெய்யுமா தினம் உள்ளே போய்க்கிட்டே இருக்கு. காப்பி, புகையிலே விவகாரம் எதுவும் கிடையாது, அப்புறம் உடம்பு ஏன் வைரம் பாய்ஞ்சு தளதளன்னு இருக்காது?’ என்று, அவரோடு சேர்ந்து வம்பளந்து பொழுதுபோக்கும் பாக்கியம் பிள்ளை பாட்டையா ஒரு தடலை சொன்ஞர். அதை மூக்கபிள்ளை மறுக்கவும் இல்லை. அவரே பெருமை யாகச் சொன்னதும் உண்டு: ஏ, காப்பி என்னடே காப்பி; நீத்தண்ணி (நீராகாரம்) பக்கத்திலே அது நிற்கமுடியும்? காலையிலே எழுந்திருச்சதும், பெரிய தம்ளருக்கு ஒரு தம்ளர் நீத்தண்ணி தினம் குடிச்சிட்டு வா. அப்புறம் உடம்பு எப்படி இருக்குன்னு நீயே பாரு. மரவையிலே பழையச் சோறு போட்டு, கட்டித் தயிரையும் ஊத்தி, திருகப் பிசைஞ்சு, சுண்டக்கறி அல்லது சுண்டல் கீரை வச்சுக்கிட்டு முன்னலே உட்காரு. ஒரு வெட்டு வெட்டிப்போடுவே நீயே. ஏ. மசால் தோசை, பெசலு ரோ ஸ் டு அது இதுங்கிறதுல்லாம் டவுனுகள்ளே ஒட்டலிலே சும்மா பேருக்குத்தான். அதுலே என்ன சத்து இருக்குங்கேரு?’ என்று ஆரம்பித்தாராளுல், சாப்பாட்டு புராணத்தை எளிதில் ஏறக்கட்டிவிடமாட்டார். அந்தக் காலத்திலே பார்க்கணும். சாப்பிடதுக்கு முன்னுடி, நெய்யை கைநிறைய வாங்கிக் குடிப்பேன். சோத் திலும் பெரிய கரண்டிக்கு ஒரு கரண்டி நெறைய ஊத்தணும். சும்மா நானும் நெய் ஊத்திக்கிடுதேன்னு கரண்டியைக் காட்டிட்டு இழுத்துக் கொள்ற விசயமே அப்போ கிடையாது. அந்தக் காலத்திலே பாலு, தயிரு, நெய்யி எல்லாம் தாராள மாவும் சகாயமாவும் கிடைச்சுது. இப்பதான் பட்டி தொட்டிகளிலே, துட்டுக் கொடுத்தாலும், பாலு, மோரு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/70&oldid=738756" இலிருந்து மீள்விக்கப்பட்டது