பக்கம்:அருமையான துணை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வை பேதம் §3 வந்து வேண்டியதைச் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்தால், மனசிலே ஆனந்தமும் அமைதியும் நிறைந்துவிடும்..." இவ்வாறு உற்சாகமாகப் பேசிக்கொண்டே இருப்பார் அவர்கேட்டதற்கு ஆள் இருந்தால். மூக்கபிள்ளே அந்த ஊரைவிட்டு அதிகமாக எங்கும் போனவர் அல்லர். வட்டச் சம்மணம் போட்டு ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்துவிடும் பிள்ளையார் மாதிரித்தான் அவரும். ஊர்வழி போறது வாறதுங்கிற தெல்லாம் சும்மா வீண்வேலை!" என்பது அவரது ஆணித்தர மான கருத்து. மதுரை பாராதவன் கழுதை” என்று அவர் ஊர்ப்பக்கத்துப் பெரிய மனிதர்கள் அடிக்கடி சொல்லி வத்ததஞல் அப்படி அந்த ஊரிலே என்ன அதிசயம் இருக்குது பார்க்கலாமே என்று அவர் ஒருதடவை மதுரை போய் வந்தார். அந்த யாத்திரை அவருக்கு உற்சாகம் அளிக்க் வில்லை. அவ்வூர் அவருள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடவும் இல்லை. அதன் பிறகு அவர் எந்த ஊருக்கும் போக வேண்டும் என்று ஆசைப்படவுமில்லை. திருச்செந்தூரில் திருவிழா நடக்குது, வாருமேன்" என்று பாக்கியம் பிள்ளை அவரை எத்தனையோ தடவைகள் கூப்பிட்டுப் பார்த்தார். கடைசியாக வெற்றியும் பெற்ருர், இரண்டுபேரும் போனர்கள். திரும்பி வந்ததும் மூக்கபிள்ளை திர்மானமாகச் சொல்லிவிட்டார்: - 'திருவிழா என்ன திருவிழா ஒரே கும்பலும் நெருக்கடி யும்தான். ஊருக என்ருல் எல்லாம் ஒரே மாதிரித்தான். தெருக்கள், வீடுகள், ஆளுகள்: சின்ன ஊரிலே இதுக குறை வாகவும், பெரிய ஊரிலே அதிகமாகவும் இருக்கும். அவ்வளவு தானே!" அதிலிருந்து பாக்கியம் பிள்ளையோ, வேறு யாருமோ அவரை எங்கும் அழைப்பதில்லை என்ருகிவிட்டது. அதனல் மூக்கபிள்ளைக்குத் திருப்திதான் உண்டாயிற்று. "எங்க தாத்தா இந்த ஊரிலேயேதான் இருந்தார். இங்கேயே கடை வைத்துச் சம்பாதித்தார். இந்த வீட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/72&oldid=738758" இலிருந்து மீள்விக்கப்பட்டது