பக்கம்:அருமையான துணை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗莎 அருமையான துணை ஆகவே, நான்காம் நாள் காலையில் மூக்க பிள்ளை புதுப் பட்டி என்கிற தனது சொர்க்கத்தை நாடிக் கிளம்பி விட்டார். என்னப்பா நீங்க...இன்னும் ஒரு வாரமாவது... என்று இழுத்தான் மகன்.

  • நல்லவேளை, பொசுபொசுப்பும், புழுபுழுப்பும் விட்டு வழியாகுது, எதுக்கெடுத்தாலும் நொள்ளாப்பு. இது சொத்தை, அது சொள்ளையின்னு வக்கனே கொழிச்சுக் கிட்டு...சீக்கிரம் கிளம்பினதே நல்லது என்று மருமகள் மன சினுள் கருதினுள். ஆயினும் வாய் வார்த்தையாக ‘என்ன மாமா இப்படி, வந்த நாலாம் நாளே புறப்பட்டுட்டீங்களே?” என்று குறைபட்டுக் கொண்டாள்.

பேரன்கள் டா-டா, பை-பை, சீரியோ!' என்று கூச்சலிட்டு வழியனுப்பினர்கள். மரியாதை தெரியுதா பாரேன்! வணக்கம், போய் வாங்க பின்னு சொல்லக் கத்துக்கிடலே. என்னென்னவோ கத்துருனுக!' என்று மூக்கபிள்ளையின் மனம் புலம்பியது. புதுப்பட்டியை நினைத்துக்கொண்டது. ‘என்ன அழகான அமைதியான ஊரு! அதை விட்டுப்போட்டு இங்கே வந்தேனே' என்று அனுதாபப்பட்டது. அவர் கால்கள் வேகமாக நடக்கலாயின. எழுத்தாளன் மலர் 1973

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/79&oldid=738765" இலிருந்து மீள்விக்கப்பட்டது