பக்கம்:அருமையான துணை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் சொர்க்கம் செல்லம்மாளுக்கு என்ன வயசு இருக்கும் என்பது அந்த ஊரில் யாருக்குமே தெரியாது. அவள் வயசு அவளுக்கே தெரியாது. அதைத் தெளிவுபடுத்தக்கூடிய ஜாதகமோ, குறிப்போ எதுவுமே கிடையாது. அவள் வயசை திட்டமாகத் தெரிந்து வைத்திருந்தவர் ஒருவர்தான்; அவளுடைய அண்ணுச்சி பரமசிவம் பிள்ளை. ஆனல், அந்த விஷயத்தை எதிலும் குறித்து வைக்காமலே அவர் இறந்து போய்விட்டார். அவர் போயும் வருஷங்கள் பல ஆகிவிட்டன. அந்தக் கணக்கும் அவளுக்கு மறந்து விட்டது. செல்லம்மாளுக்கு வயசு எழுபது இருக்கலாம், எண்டதா கவே இருந்து விடலாம் அல்லது, எழுபதுக்கும் எண்ப துக்கும் இடைப்பட்ட எதுவாக வேண்டுமாயினும் இருக் கலாம். அது அவளுக்கே நிச்சயமாகத் தெரியாததஞல், ஏளா, உனக்கு வயசு என்ன இருக்கும்?' என்று அவளிடம் யாராவது அவ்வப்போது விசாரிக்கிறபோது, அந்த நேரத் தில் தனக்குத் தோன்றியதை அவள் சொல்லி வைப்பாள்; எழுபதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட ஏதாவது ஒரு எண்ணுகத்தான் இருக்கும் அது. அவள் இப்படி ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு எண்ணைச் சொல்வதஞல், தனது வயசு விஷயத்தில் செல்லம்மா பொய் சொல்கிருள் என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அது முழுத் தவறுதான். எழுத்து-படிப்பு வாசனை இல்லா மல், ஞாபகசக்தியும் திடமாக இராது. தங்கள் வயசைக் கூடச் சரியாகத் தெரிந்துகொள்ள இயலாத நிலையிலே இன்னும் எத்தனையோ பேர்-குறைந்த வயசுக்காரர்கள் கூட-இருக்கிருர்கள். ஆகவே, வயசு முதிர்ந்து, தள்ளாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/80&oldid=738767" இலிருந்து மீள்விக்கப்பட்டது