பக்கம்:அருமையான துணை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் சொர்க்கம் 密密 மாறிப் போச்சு. இந்த ஊரு குட்டிச் சுவராயிக்கிட்டு வருது. கிழடு கட்டைகள்தான் வேறே வழியில்லாம இங்கே கிடக்குதுக. இளவட்டங்க எல்லாம் டவுணு, பட்டன மின்னு எங்கெங்கியோ போயிட்டுதுக. இந்தப் பட்டிக் காட்டிலே, இருக்கிற ஏழெட்டு வீடுகளுக்குள்ளேயே மூனு: கட்சி, உன்னை எனக்குப் பிடிக்காது. என்னை உனக்குப் பிடிக்காது; அவன் வீட்டை எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்காது’னு! கோயில் விஷயத்திலும் தகராறுதான். இப்ப ஒரு மாசமா அம்மனுக்குப் பூசையே நடக்கலே போட்டியும் பொருமையும்தான் காரணம்..." அவர் குறைகளே அடுக்கிக்கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் உள்ள அநேகம் கிராமங்களேயும் சுற்றிப் பார்த்திருந்த கைலாசம், ஒண்ணுக்கு ஒண்ணு அண்ணளுகத் தான் இருக்கு. கிராமங்க உருப்படா நிலையிலே இருக்கறதிலே அதிசயமேயில்லே என்று எண்ணினன். ஆச்சிக்கு இந்த ஊரு அதிசயப் பூமியாகப் பட்டிருக்குது!" என்று அவன் மனம் சிரித்தது. இப்போ அவ என்ன செய்துக்கிட் டிருக்காளோ? என்றும் தவித்தது. செல்லம்மா கோயிலில் தனியாக விடப்பட்டதும், மண்டபத்துத் துரனில் சாய்ந்துகொண்டு, செளகரியமாகக் காலை நீட்டி உட்கார்ந்தாள். அருகில் நின்ற வேப்பமரம் கு ஞ ண ம யு ம், மென்காற்றும் பரப்பிக்கொண்டிருந்தது. வெயிலில் வந்த களேப்புக்கு அது அருமையான பரிகாரமாக இருந்தது. அவள் சும்மா வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். தானு கவே சிரித்துக்கொண்டாள். யாரு, மூக்கத் தேவனு? ஏன் ரயிலடிக்கு வண்டி கொண்டாரலே?" என்று உரக்கக் கேட்டாள். அங்கே அது யாரு? ஓகோ எல்லாரும் ஆச்சி யைப் பார்க்க வந்திருக்கிங்களா? வராம இருக்க முடியுமா? இந்தக் கையினலே எவ்வளவு சோறு ஆக்கிப் போட்டிருக் கிறேன். உங்க எல்லாருக்கும்? இன்னும் போடத்தானே போறேன்! அம்மனுக்குப் பூசை நடத்தனும், செவ்வரளிப் பூ மாலை நிறைய வேனும், இளநி, பாலு, தயிரு எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/92&oldid=738780" இலிருந்து மீள்விக்கப்பட்டது