பக்கம்:அருமையான துணை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளபார்ட்காரி' அந்த ஊர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகும் அமைதியும் நிறைந்த இடம். எதிரே, சற்று தூரத்தில், கம்பீரமாக நின்ற மலேயின் தோற்றம். முன்னே, மழை நீர் நிறைந்து கிடந்த ஏரியின் பரப்பு. எங்கும் பசுமையும் எழிலும் பூசியவாறு நின்ற மரங்கள், செடிகள், இனிய காற்றும், அடிக்கடி சிலு சிலுவென்று பூ உதிரல்போல் படிந்து மறையும் இளம் தூறலும் இதமாக இருந்தன. ஒரு பாலத்தின்மீது அமர்ந்து மன நிறைவுடன் ரசித்துக் கொண்டிருந்தபோது, என் எண்ணத்தை நண்பர் சிதம்பரத் திடம் தெரிவித்தேன். அவரது நீண்ட நாளைய அழைப்பை ஏற்று, அவர் அதிதியாக வந்திருந்தேன். ஊரையும் சூழ்நிலை யையும் பார்த்த பிறகு, முன்னரே வராமல் இருந்துவிட் டேனே' என்ற வருத்தம்கூட எனக்கு ஏற்பட்டது. இந்த ஊருக்கு இன்னுெரு பெருமையும் உண்டு என்ருர் தண்டர். 森。 ன்ன பெருமையோ!' என்று அலட்சியமாகக் கேட் டேன். "கன்னபார்ட் காமாட்சியின் ஊர் இதுதான்!” கன்ள பார்ட் காமாட்சியா? நான் அறிந்த வரையில் அப்படிப் புகழ் பெற்றிருந்த நடிகை ஒருத்திதான் இருந்தாள். முப்பது வருஷங்களுக்கு முன்பு, தென் ஜில்லாக்களில் அவள் பெயர் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. அப்போது புகழேணியின் உச்சிக்கு விறுவிறு என்று ஏறிவந்த அவள் திடீரென்று மறைந்து விட்டாள். அதாவது, நாடக உலகி விருந்து ஒதுங்கிக் கொண்டாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு வயது இருபதுக்குள்தான் இருக்கும். ஏன் அவள் திடீர் ஓய்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/95&oldid=738783" இலிருந்து மீள்விக்கப்பட்டது