பக்கம்:அருமையான துணை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ள பார்ட்காரி &8 பரட்டைத் தலைமுடி தனி ஆட்டம்போட, அவர் மே-ைமீது திங்குதிங்கென்று குதித்துப் பாட்டுப் பாடித் துள்ளிப் பாய்வது பிரமாதமாக இரு க் கு ம். ஆர்மோனியக்காரர் முன்னுல் போய்க் குதித்துக்கொண்டே, கோட்டைக் கோத் தளம் மீதிலேறிக் கூசாமல் குதிப்பேன். பலபா குதிப்பேன். ஐஸா குதிப்பேன்... ஜலக்கா... பலபr. . . ஐலா... என்று அடுக்கி உருட்டி ஆர்மோனியஸ்டுக்கு தண்ணிகாட்டுகிற வேலை ரசிகமகா ஜனங்களின் கைதட்டலையும் ஆரவாரத்தை பும் தட்டி எழுப்பும். இப்படி குதிப்பேன் என்பதைத் துவையலாக்கி திருப்திப்பட்ட பிறகுதான் அவர் காவலர் கண்டுபிடிக்க வந்தால் கத்தியால் குத்திடுவேன்' என்று: அடுத்த அடிக்குத் தாவுவார். ஒரு நீச்சல் கப்டலேப் பிடிப் பேன், கல்கத்தா துறைமுகம் பார்ப்பேன்’ என்று அவர் மேலேறுவதற்குள் ஆர்மோனியஸ்ட் பா வ ம், திணறித் திண்டாடிப்போவார். இந்த ஒரு பாட்டுக்கே அரை மணி நேரம் எடுத்துக் கொள்வார் அவர். ஆர்ப்பாட்டக் கள்ளன் காத்தலிங்கத் தின் அமர்க்களமான நடிப்பைக் காணத் தவருதீர்கள்’ என்று நோட்டீசில் விசேஷ அறிவிப்பு அச்சிடப்பட்டிருக்கும். சில சமயம் அவர் கைகளில் சிறு தபேலாக்களை இடுக்கிக்கொண்டு, அவற்றில் அடித்து ஓசை எழுப்பி அட்டகாசம் பண்ணுவார். அவர் குதிக்கிற குதியில் மேடைமீது தூசி கிளம்பிப் படலமாய்ப் பரவிநிற்கும். நள்ளிரவில் திருட வருகிறவன் இப்படித்தான் ஆடி அட்டகாசம் பண்ணுவாளுக்கும்? பாட்டுப்பாடி குதியாட்டம் போட்டு கலாட்டா செய்வானுக்கும்? இந்த நடிப்பில் ரியலிசம் இல்லையே!-இப்படி எல்லாம் விமர்சனம் பேசக் கூடிய மனுேபாவமோ, ரசனையோ அந்த நாட்களில் தலே யெடுத்திராத காரணத்திகுலே, கள்ளபார்ட் காத்தலிங்கம் ஜமாய்த்துக்கொண்டிருந்தார். அப்பவே அவருக்கு வயது இாற்பதைத் தொட்டிருந்தது. ஒருசில வருஷங்களில் அவரது மூப்பு முன்னேப்போல் குதியாட்டம் போட்டு நடிக்கவிடாதவாறு அவரைத் தடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/98&oldid=738786" இலிருந்து மீள்விக்கப்பட்டது