பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/102



மார்களும் பிறரும் பாடுகின்றனர்' என்றாள். நான் இவருடைய அருமை பெருமைகளையெல்லாம் பல அறிஞர்கள் மூலம் கேட்டிருக்கின்றேன். எனினும் அன்றுதான் நேரில் கண்டேன். கவிஞருக்கு இருக்கவேண்டிய முகப் பொலிவு முற்றும் பொருந்தியிருத்தலைக்கண்டு நான் மிகவும் வியந்தேன்; எனினும் நான் அவரிடம் கலந்துரையாடவே இல்லை.

டாக்டர் தருமாம்பாள் அம்மையாரும், வ.பா. தாமரைக்கண்ணி அம்மையாரும் செந்தமிழைக் காப்பதற்காகவே சேனை ஒன்று வேண்டும்' என்னும் பாரதிதாசரின் பாடலைப் பாடிக்கொண்டே இந்தி எதிர்ப்புக்காக மாபெரும் சேனையைத் திரட்டினர். சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் பாவேந்தராகிய பாரதிதாசனரின் பேச்சுத்திறனைக் கேட்டு வியந்திருக்கின்றேன். ஆதலால், -

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்”

கொண்ட அவர் தம் தோற்றப் பொலிவு என் நெஞ்சில் நிலைத்து நின்று விட்டது.

'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என்னும் பாடலைப் பாடிக்கொண்டே, டாக்டர் தருமாம்பாள் அம்மையாரும், மலர்முகத்தம்மையாரும் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு 1938ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாளன்று சிறை புகுந்தனர். அதன் பிறகு நான் புதுவைக்கு அடிக்கடி சென்று கூட்டங்களில் தலைமை தாங்கிச் சொற்பொழிவாற்றி இருக்கின்றேன். எனினும் நான் பாரதிதாசர் தம் இல்லம் சென்று அவரைக் கண்டதில்லை. தமிழைப் பழிப்போரைத் தாக்கிப்பேசும் அவருடைய கடுமையான பேச்சிலிருந்து அவர் ஒருகால் முரடராய் இருப்பாரோ என்று நான் ஐயம் கொண்டதே அதற்குக் காரணம். எனினும் நான் பேசும் கூட்டங்களில் அவருடைய