பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது







1941 ஆம் ஆண்டு திருச்செங்கோடு கழக உயர்நிலைப் பள்ளியில் நான் பத்தாம் வகுப்பு பயிலுங்கால், அங்கு எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் திரு.உலகஊழியர். பாரதியார் பாடல்ஒன்றில் எனக்கு ஐயமேற்பட்டபோது, அவரிடம் நான் பாரதியார் கவிதைகளைத் தருமாறு கேட்டேன். அதற்கவர் 'பாரதியாரைத் துாக்கி விழுங்கும் கவிஞர் தோன்றியுள்ள இந்நாட்களில் நீ பாரதியாரைத் தேடுகிறாயே!' என்றார்.அவர் குறிப்பிட்ட கவிஞர் யாரென நான்வினவிய போது, அவர் பாரதிதாசனைக் குறிப்பிட்டார்.அவரது கவிதைகள் முதற்றொகுதியையும் கொண்டு வந்து கொடுத்தார். அன்றுதான் நான் புரட்சிக் கவிஞர் பற்றித் தெரிந்து கொண்டேன் பின்னர் பள்ளியில் நடந்த போட்டிகளில் பங்கு பெற்றேன். அவற்றிற்கான பரிசுகளில் பாரதிதாசன் கவிதைகளையும் பரிசாகப்பெற்றேன். அவர் கவிதைகள் மிகப் புரட்சியுடையனவாகவிருந்தன. அப்பருவத்தில்விளங்காத கவிதைகளும் அத்தொகுதியில் இருந்தன. திரு.உலகவூழியர் தந்த ஊக்கத்தால் நானப்போது கவிதை புனையவாரம்பித்தேன். நானெழுதிய சிலபாடல்களைப் பார்த்துவிட்டு அவர் 'என்னம்மா புரட்சிக் கவிஞர் படித்ததின் விளைவு புலப்படுகின்றதே!’ என்பார்.

பின்னர் கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போதும் இவர் நூல்களைப் படிப்பதுண்டு. அந்நாட்களில் எனக்குப் பிடித்தமான வரிகள்,