பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/158



கியது. பாதி நனைந்து ஒதுங்கி நின்றேன். மழை சிறிது நின்றதும் வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டு முகப்பில் 'பாரதிதாசன் பிக்சர்ஸ்'என்று பெயர்ப்பலகை தொங்கிக் கொண்டிருந்தது! -அதாவது தூக்குப்போட்டுக் கொண்டிருந்தது.

வீட்டின் தாழ்வாரத்தில் ஒருவர் 'குயில்' ஏடுகளை முகவரி எழுதி விடுப்பதில் முனைந்திருந்தார்.

'பாதிக் குளியலுடன்’ வந்து நின்ற என்னைப் பார்த்து "நீங்கள் யார்? என்ன வேண்டும்?" என்றார் அந்த இளைஞர்.

“என்பெயர் மணிவேலன்..." சொற்றொடரை முடிக்கவில்லை.

"நீங்களா அது? குயிலில் 'தென்னைப்பெண்ணே! என்ற பாடலை எழுதியிருக்கிறீர்களே...அவரா?’’

"ஆமாம்!'

" நான்தான் பொன்னடியான்; பாவேந்தரின் உதவியாளன். ’’

“இங்கேயே சிறிது நில்லுங்கள்; பாவேந்தர் விழித்துக் கொண்டிருக்கிறாரா என்று பார்த்துவிட்டு வருகிறேன்" -பொன்னடியான் உள்ளே சென்றார்.

எனக்கு வியப்பு! நான் எழுதிய பாடலைக் கூட நினைப்பு வைத்திருக்கிறாரே இந்த இளைஞர்! பாவேந்தர் அந்தப் பாட்டைப் படித்திருப்பாரோ? அந்தப்பாடலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தேன். தான் பெற்ற குழந்தையின் முகத்தை எத்தனைமுறை பார்த்தாலும் தாய்க்குச் சலிப்பதில்லை! அப்படித்தானே பாவலனுக்கும்?