பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

பாவேந்தருடன் ஒருநாள்

“வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள் இன்னும் உனக்குச் சரியாகத் தெரியவில்லை: (சில நூற்பாக்களைக்கூறி) இவற்றைப்படி; பெயரெச்சத்தில் வல்லெழுத்து மிகாது; ஆனால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மிகும்...'

ஆகா! நான் பெற்ற பேறு தான் என்னே! எனக்கு ஆசிரியராய் இலக்கணம் கற்பிக்கிறார்!நான் கற்கிறேன்! இதை மறக்க முடியுமா?

‘'நீ கையெழுத்தேட்டைக் கொண்டுவந்தது தான் சரி! அப்பொழுதுதான் பிழைகளைத் திருத்தி உண்மையான சிறப்புரை வழங்கமுடியும் . இதைப்பார்! ...ஒரு நூலை எடுத்துக் கொடுக்கிறார்; நான் வாங்கிப் பார்க்கிறேன் ஒரு தமிழ்ப்பேராசிரியர் எழுதிய பாடல் தொகுப்பு. அச்சிடப்பட்டுள்ளது... (பெயரைக் குறிப்பிட விரும்ப வில்லை)

இவன் தமிழ்ப் பேராசிரியன்! எவ்வளவு பிழைகள்!அச்சிட்ட பின் எப்படித் திருத்துவது? சிறப்புரை கொடுக்கவில்லையானால் இவன் பெரிய பாவேந்தன்!...முரடன்!” என்பான்?’’

என்னுடைய நூலைப் படித்துத் திருத்திவிட்டார்.

'தம்பி குயிலில் சேர்ந்து பணிசெய்கிறாயா?”

“எனக்குக் குடும்பம் இருக்கிறது. ’’
“...... (சிறிது மோனநிலை) முழுநேரத் தமிழ்த்தொண்டனாக நீ மாற வேண்டும்......

......சிறப்புரை எழுதி உனக்கு அனுப்பி விடுகிறேன்...

நீ போ...ஆனால் ...” -

நான் திகைத்தேன், என்ன நடக்கப்போகிறதோ என்று,