பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது








 எனக்குப் பாவேந்தர் பாரதிதாசனர் நினைவு ஓர் இனிய கனவு. அவரோடு நான் கொண்ட உறவு பெருமைக்குரியது மட்டுமல்ல; எனக்குப் பெருமிதம் தருவதும் ஆகும். திருவள்ளுவர் தந்த முப்பாலை ஆராய்வதன் வழித் தமிழினத்தின் தலைமகனும் அவரோடு என்னை உறவுபடுத்திக்கொள்வதில் எனக்கு எவ்வளவு பெருமையும் பெருமிதமும் ஏற்படுகின்றனவோ அவ்வளவு பெருமையும் பெருமிதமும் பாவேந்தரோடு எனக்கேற்பட்ட உறவால் உண்டாகின்றன. அவர் இந்த நூற்றாண்டின் இணையற்ற பாவலர்; பாட்டிலக்கியத்தில் முடிசூடா மன்னர். யாருக்குத்தான் அவர் உறவு பெருமிதம்தராது?

பாவேந்தரோடு உறவு சிறியதுதான்; ஒருசில சந்திப்புக்கள் கொண்டதே; நீண்டகால இடைவெளியும் கொண்டது; அனால் அரியது; நான் நினைவில் கொண்டு போற்றி வைத்தலுக்கு உரியது. வறியோன் வயிரமாலை ஒன்றைப் போற்றிப் பேணுவது போன்றது அது.

1950முதல் 1956வரையிலான காலம் அது; தமிழுணர்ச்சி வெள்ளம்போல் பாய்ந்து பரவிய காலம். தமிழ் தவிர வேறு ஒன்றும் அறியாத ஒருமை உள்ளம் அன்றைய என் உள்ளம். ஓரளவு தமிழ் வரலாறு தெரியும்;ஒருசிறிது தமிழ் இலக்கிய இலக்கணம் தெரியும். தமிழுணர்ச்சியின் ஊற்றுக்களான மறைமலை, பெரியார், அண்ணா என் ஆசான்கள். அவ்வியக்கத்தின் போர்ப்பாவலர்-செயங்-