பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/166

கொண்டார்-பாரதிதாசன்; அவர் பாட்டும் உரையும் எனக்குப் பாடம்.

தமிழ் வாழ்வு, பகுத்தறிவுக் கொள்கை. தமிழால் ஈர்க்கப் பட்டுத் தமிழ் பயில எண்ணம்கொண்டிருந்தேன். முனைவர் மு. வ. புகழ் தெரியும்; மு.வ.நூல்கள் அறிமுக்ம். பைந்தமிழைப் பற்றோடு கற்பிக்கும் பச்சைய்ப்பன் கல்லூரியில் மு. வ.நிழலில் விரும்பிச் சென்று தங்கித் தமிழ் படித்தேன். 1953 முதல் 1956 வரை பி. ஏ. (ஆனர்சு) .

கொள்கையாராய்ச்சி, கட்சிக்கூட்டங்கள்...காட்டாற்றுப் போக்கில்லை; சமவெளியாற்றுப்போக்கு.

இந்நிலையில் சென்னைக்கு வந்திருந்த பாரதிதாசனுரை என் இனிய நண்பர் ஒருவரோடு காணச்சென்றேன். பச்சையப்பன் கல்லூரியில் பேசுவதற்கு அழைத்தல் நோக்கம்.

கவிஞர் அமைதியாக வரவேற்றார்; தயங்காது ஒத்துக் கொண்டார். அது அவருக்குச் சாதாரண வாழ்க்கைப் போக்கு. ஆனல் எங்கள் கல்லூரிக்கு வருவதில் அவருக்கு வருமானம் ஒன்றும் இல்லை. இளைஞருடன் கலந்துரையாடலில் அவருக்கு இன்பம். அவரைக் கண்டு பேசியதில் எனக்குப் பெருமகிழ்ச்சி, ஒரு பெருங்கவிஞரை எளிதிலே கண்டுவிட்ட பெருமிதம்.

கவிஞர், 'பச்சையப்பன் கல்லூரியில் யார் தமிழ்த்துறைத் தலைவர்” என்று வினவினர். 'டாக்டர் மு. வரதராசனார்’ எனப் பெருமையோடு கூறிக் கொண்டேன். உடனே அவர் 'யார்? அந்தக் கரியனா' என்றார், எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் மதித்துப் போற்றும் பேராசிரியரை ஆண்பால் ஒருமையால் கூறிப் பெயர் கூடச் சுட்டாது எளிய பட்டப்பெயர் வைத்துப் பாவேந்தர் வழங்கிவிட்டாரே என்பது என் உள்ளத்தைக் தைத்தது. நிலவொளியினை மேகம் மறைப்பது போன்று தோன்றியது.