பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173/இழந்த செல்வம்


அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள் படி நல்லபடி
புகப்புகப் படிப்படியாய்ப்
புலமை வரும் என்சொற்படி
நூலைப்படி!
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி!
சேதி அப்படி! தெரிந்துபடி
தீமை வந்திடு மேமறுபடி
நூலைப்படி!
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி?
நூலைப்படி!
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன் பம்மறுபடி
ஆகும்என்ற ஆன்றோர்சொற்படி
நூலைப்படி!

'இந்தப்பாடலை எவ்வளவு நேரத்தில் பாடினீர்கள்?'என்று நான் தொகுத்து வைத்திருந்த குயில் தொகுதியை அவர் கையில்கொடுத்துவிட்டுக் கவிஞரைக் கேட்டேன். பாடலை எழுதி அடித்துத் திருத்தி அமைத்திருப்பாரோ என எனக்கு அறிய ஆவல். கவிஞர் கை விரல்களில் சடக்குப் போட்டுக்கொண்டு 'ஒருநொடியில்’ என்றார். 'இந்தப் பாடலைப் படிப்பதற்கு எவ்வளவு நேரமோ அவ்வளவு நேரம்தான் இயற்றுவதற்கும்’ என்றார் கவிஞர். இவ்வாறு கூறிவிட்டுக் கவிஞர் அந்தப் பாடலை மெல்லிய குரலில் இசையோடு பாடிக்காட்டினார். யதுகுலகாம்மோதி இசையிலும் ஆதிதாளத்திலும் அமைக்கப்பட்ட இப்பாடலை 'எடுப்புடனும் உடனெடுப்புடனும்' அவர் பாடினார். கைவந்த கவிஞர்க்குக்