பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/178


பொதுப்பிரிவில் (General ward) அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். உறக்கமோ மயக்கமோ தெரியவில்லை. அவர் உணர்வின்றிப் படுத்திருந்தார். அண்மையில் சிலர்-ஒருசிலரே-கவலையுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் நெருங்கிய உறவினர் போலும். பாமன்னரின் மகன் மன்னர்மன்னன் நின்றுகொண்டிருந்தார். வேறு யாரும் இல்லை. மன்னர் மன்னன் எனக்கு அறிமுகம் இல்லை. சிறிதுநேரம் பார்த்திருந்துவிட்டுத் திரும்பி விட்டேன். விடுதிக்குத் திரும்பிவந்த சிறிது நேரத்தில் பாவேந்தர் பாவுலகையும் பாருலகையும் நீத்துச் சென்று விட்டார் என்ற செய்தி பரவியது. முற்பகல் அச்செய்தி என் காதில் விழுந்தவுடன் தியாகராய நகரில் அவர் இல்லத்துக்கு விரைந்தோடினேன். அவர் இல்லம் 'வெறிச்சோடி' இருந்தது. பாவேந்தர் மருத்துவ விடுதியிலிருந்து இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டவுடன் புதுவைக்குக் கொண்டுபோகப்பட்டார்; பிறந்த மண்ணிலேயே மறைந்துபோகத் தன் இல்லத்திற்கே சென்றார், செந்தமிழுக்குப் பாப்புனைந்த நா செந்தழலுள் வெந்தது.

பாவேந்தரோடு கருத்திலும் எண்ணத்திலும் நான் உறவு கொண்டிருந்த அளவு பழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. அவர் பாக்கள் இனிமையானதுபோல் அவர் பழக்கமும் எனக்கு இனிமை தந்தது. கல்வியைப் பற்றி வற்புறுத்தி வற்புறுத்தி அவர் பாடினார். 'படித்த குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ என்பது அவர்கருத்து. அப்போது எம்.ஏ., எம். லிட். , எம். பி.பி.எஸ். ஆக விளங்கிய உடன் பிறந்த எம் மூவரையும் "ரொம்ப படித்த குடும்பம்’ என்று பாவேந்தர் புகழ்பாடிக் கொண்டிருந்தார், ஆங்கில உயர்கல்வி பெற்ற எங்கள் நிலை அவருக்குப் பெருமை தருவதாகத் தோன்றியது. .உரிமையோடும் பெருமையோடும் எங்களை அவர் தம் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டார். அவருக்குச் சாதி உணர்வு இருந்ததா என்பது நான் அறியமுடியவில்லை. அவரோடு பழக்கம்