பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19/மார்கழியின் உச்சியில்


என்ன சொன்னர் என்பதை அப்படியே எழுதுகிறேன்:

"பாரதியாரை நான் முதன் முதலில் சந்தித்த போது எனக்கு வயது இருபதிருக்கும். படித்த இளைஞர் கூட்ட மொன்று எப்போதும் அவரைச் சுற்றிக் கொண்டிருக்கும். பாரதி இலக்கியம், அரசியல், சமூகம் பற்றிப் பல கருத்துக்களையும் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டு கவிதை எழுதத் தொடங்குவார். இரண்டடி எழுதுவார். ஊஹூம்... வல்லடா!' என்று தலையை ஆட்டி விட்டு எழுந்து வந்து விடுவார். பாதியில் விட்ட சில வரிகளை நான்கைந்து மாதங்கள் கழித்துக்கூடச் சிந்தித்து எழுதிமுடிக்கும் வழக்கம் அவருக்குண்டு.

அவரெழுதிய கையெழுத்துப் படிகள் அங்குமிங்குமாகக் கிடக்கும். ஒருநாள் அவர் எழுதும் விசிப்பலகை டிராயரை இழுத்துப் பார்த்தபோது 'பாஞ்சாலி சபதம்’ என்ற கையெழுத்துப்படி இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தேன். பாடல்கள் மிக எளிமையாகவும், புரியும் படியும் இருந்தன. அதே சமயம் மிகச் சுவையாகவும் இருந்தன. இப்படி எளிதில் புரியும்படியான கவிதையை நான் பார்த்ததில்லை. புரியும்படி எளிதாகக் கவிதை எழுதமுடியும் என்றும் நான் நினைத்ததில்லை.

அக்கையெழுத்துப்படி என் கவிதைப் போக்கில் பெரிய மாறுதலை உண்டாக்கியது; சுப்பிரமணியர் துதியமுது எழுதிய சுப்புரத்தினத்தைப் பாரதிதாசனுக்கியது. "எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற எனது பாடல் பாஞ்சாலி சபதம் கையெழுத்துப் படியைப் படித்தபின் எழுதியது."

பாரதியாரையும், பெரியாரையும்தான் பாவேந்தர் தம் வாழ்க்கையில் மதித்தார். ஒரு நாள் புகை பிடித்துக் கொண்டிருந்த பாவேந்தர் "தோ! இருக்கே சிகரெட்!