பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29/பாவேந்தரோடு நான்: சில நினைவுகள்


களின் கையாட்களிற் பலரும் கவிஞரை வாய்க்கு வந்த படி ஏதேதோ பேசினர்.

பாவேந்தரால் அதைச் சகித்துக் கொள்ளமுடியவில்லை. அக் கொடுங்காலிகளிடையே இருக்கிறோமே என்பதையும் கருதவில்லை, சினங்கொண்ட சிறுத்தையைப்போல் சீறியெழுந்தார்; அவர்களை முறைத்துப் பார்த்தார். அந்த அறிவிலிகளில் ஒருவன் கவிஞரின் கன்னத்தில் அறைந்து விட்டான். அவன் தனியிருந்து தாக்கியிருந்தால், கவிஞரின் ஒரே ஓர் அறையில் அவன் உயிர் போயிருக்கும். காலஞ்சென்ற நெல்லிக்கிருஷ்ணன் இடையே புகுந்து கவிஞரைப் பாதுகாப்போடு வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவந்தார். இதைக் கேட்டறிந்ததும் சிறையிலிருந்த பொதுவுடைமைக் கட்சித்தலைவர் திரு.வ. சுப்பையாவே மிகுந்த கவலைப்பட்டாராம். தலைவர் சுப்பையா சிறையில் இல்லாதிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்தேறியிருக்காது.

அறிஞர் அண்ணா, பெரியார் இராமசாமியின் பேச்சைக் கூடக் கேட்காமல் கவியரசருக்குப் பொன்னாடை போர்த்த வேண்டும் என்று ஏற்பாடு செய்தார்கள். 28-7-1946 இல் நாவலர் க.சோ. பாரதியார் தலைமை தாங்கினார்; இசையரசு தண்டபாணி தேசிகர் இன்னிசை வழங்கினார்; இரா.பி. சேதுப்பிள்ளை முதலிய மாற்றுக் கருத்துடைய பெரியார்கள் பலர் பாராட்டுரை வழங்கினர். "பெரியார் இராமசாமி இவ்விழாவில் இல்லாத ஒரே குறைதான் என் மனக்குறை" என்று இறுதியில் நன்றி கூறிய அறிஞர் அண்ணாவின் பேருரையோடு விழா சிறப்புடன் முடிவுற்றது. கவிஞர்க்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு 25,000ரூபாய் கொண்ட பொற்கிழி ஒன்று வழங்கப்பட்டது. இவ்விழாவிற்குத் துணை நின்ற பொதுமக்கள், செயல்புரிந்த அறிஞர் அண்ணா, பாரதிதாசன் நூல்களையெல்லாம் நல்ல முறையில் கவினோடு வெளிக்கொணர்ந்த முல்லை பழ. முத்தையா,