பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31/பாவேந்தரோடு நான்; சில நினைவுகள்


தந்திருந்தார். அதையே நான் திரும்பத்திரும்ப உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். என் எண்ணத்தைக் குறிப்பாலுணர்ந்த கவிஞர், "நீதான் முதற்பரிசு பெறவேண்டியவன். நான் உன்னை அழைத்து வந்திருக்கிறேன். உனக்கு முதற்பரிசு கொடுத்தால், எனக்கு வேண்டியவனுக்கு முதற்பரிசு கொடுத்து விட்டார்கள் என்ற பேச்சு எழக் கூடும். அதனால், நானேதான் மற்றொருவருக்கு முதற்பரிசு கொடுக்கச் செய்து, உனக்கு இரண்டாம் பரிசு கிடைக்கச் செய்தேன்" என்று விளக்கமளித்தார். இவ்வாறு என்னை முதன்முதல் கவியரங்கில் பங்கு கொள்ளச் செய்து, எனக்கு வழிகாட்டியவர் கவியரசரேயாவார்.

கவியரசர் அவர்கள் திருக்குறளுக்குப் பதின்மர் முன் எழுதிய உரையுடன் ஒப்பிட்டு எதிர்க்கும் புதிய உரையைப் பொதுமக்களிடம் பரவவிட்டார். அதன் பயனாக மதுரையில் பொதுமக்களால் அழைக்கப்பட்டு மதுரை உடுப்பி உணவு விடுதியில் இருந்து கொண்டே திருக்குறளுக்குப் புத்துரை எழுதி வந்தார். கவியரசர் அவர்கள் திருக்குறளுக்குப் புத்துரை பெரும்பாலும் எழுதி முடித்து விட்டார். அதனை வெளிக்கொணர்வது அரசியலாருடையவும், பொதுமக்களுடையவும் கடமையாகும்.

மதுரை அன்பர்கள் தனுஷ்கோடிராசு, பாரதி புத்தக நிலையம் சாமிநாதன், வை.சு. மஞ்சுளாபாய் அம்மையார், கு.திரவியம், பொன்னம்பலனார் முதலியவர்கள் கவிஞரின் அறுபதாம் ஆண்டுவிழாவைச் சீரும் சிறப்புமாக நடத்த வேண்டுமென எண்ணினர்; முயன்றனர். அதற்குப் பெரிதும் ஊக்கமூட்டியவர் தற்போது மேலுர் அரசினர் கலைக்கல்லூரி முதல்வராயுள்ள திரு.பண்டித. இராம. மீனாட்சி சுந்தரம் பிள்ளை எம்.ஏ.ஆவார்.

1951 ஆம் ஆண்டு இளைஞர்களால் தொடங்கப்பெற்ற இம் முயற்சி மதுரையில் ஈடேறாத நிலையில் இருந்த