பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Ο


திருச்சி மாவட்டச் செந்துறையில் பிறந்து, தமிழ் மறவர் பொன்னம்பலனாரால் உருவாக்கப்பட்டு, பாவேந்தர் கையில் பட்டை தீட்டப்பட்டவர் இந்தப் பொன்னடிக் கவிஞர். பள்ளிப்பருவத்திலேயே இனப் போராட்ட வீரராகத் திகழ்ந்தவர்.

பாவேந்தரின் இறுதி நாட்களில் அவர் மாணவராகவும், செயலாளராகவும், அணுக்கத் தொண்டராகவும் பணிபுரிந்தவர். உருவத்தில ஊசிமிளகாய் போல ஒல்லியானவர்; காரமானவர். தமிழைத் தாய்மையோடும், உருசியத்தைக் காதலோடும் பார்த்துப் பழக்கப்பட்டவர்.

அமுதும் தேனும்போல ஓராணும் பெண்ணும் பெற்று வளர்ப்பவர். பதின்மூன்று ஆண்டுகள் பிடிவாதமாகப் பாட்டிதழ் நடத்திக்கொண்டிருப்பவர்.

பாவேந்தர் விட்டுச் சென்ற கடைசிக்குழந்தையான 'தமிழ்க் கவிஞர் மன்ற'த்துக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் செவிலித்தாய் இவர். பாவேந்தரின் இலக்கியப்பூங்காவில் துடிக்கும் தும்பியாகப் பறந்து கொண்டிருந்த நாட்களில், அப்பாட்டு முல்லை தமது உள்ளத்தில் பரப்பிய மணத்தை இக்கட்டுரையில் அள்ளித் தெளித்திருக்கிறாா்.

Ο