பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/46


 வதைப் போல மீண்டும் மீண்டும் விளக்கி, சொல்ல நினைத்ததை என் உள்ளத்தில் பதியுமாறு தெளிவாகப் புரிய வைத்து விடுவார். எத்தனைமுறை, எத்தனை வகையான கேள்விகளைத் திருப்பித் திருப்பிக் கேட்டாலும் சிறிதும் சலிப்படையாமல், முகங்கோணாமல் புரியும்படி சொல்லிக்கொடுப்பார். நியாயமான கேள்விகளுக்கு அடிமுதல் நுனிவரை விளக்கிக் கூடுமானவரை ஆத்திரம் அடையாமல் சொல்லிக் கொடுப்பது அவரது தலையாய பண்புகளில் ஒன்று. ஆனல் எல்லாம் தெரிந்தது போல் தலையாட்ட ஆரம்பித்தாலோ அது அவரைக் கோபப்பட வைத்துவிடும் என்பது அவரை அறிந்தார் அறிந்த ஒன்று.

சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அப்போது பயின்று வந்தவரும், என் நெருங்கிய நண்பருமான கவிஞர் முருகுசுந்தரம் அடிக்கடி கவிஞரைப் பார்க்கவருவார். புரட்சிக்கவிஞரின் மேல் அவருக்குத் தணியாத ஆசை. அவர் வரும்போதெல்லாம் கவிஞரிடம் ஓயாது எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார். கவியரசரின் எழுபதாண்டு அனுபவத்தை நண்பர் முருகு தமது ஆறுமாதப் பயிற்சிக் காலத்திற்குள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற துடிப்புடையவர். ஒருநாள் மாலை ஐந்து மணி இருக்கும். அன்று வந்திருந்த திரு. முருகுசுந்தரம் கவிஞரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் கூடத்தில் குயில் ஏட்டின் வேலையில் மூழ்கியிருந்தேன். முருகு வழக்கம் போல் தமக்கு ஏற்பட்ட ஐயத்தைக் கேட்டிருப்பார் போல் தெரிகிறது. கவிஞர் உடனே உரத்த குரல் கொடுத்துப், 'பொன்னடி’ என்று என்னை அழைத்தார். நான் சென்றதும், 'இப்படி உட்கார்’ என்று திரு. முருகு சுந்தரம் பக்கத்தில் என்னை அமரச் செய்து, அவர் கேட்ட கேள்வியை எனக்குத் தெரிவித்து, அதற்குரிய விளக்கத்தையும் சொன்னார். பிறகு, 'சரி! நீ போய் உன் வேலையைக் கவனி’ என்று என்னை அனுப்பினார், அன்று கவிஞர் எங்களுக்குக்