பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59/என் தந்தையார்



பாட்டனார் மிகவும் அஞ்சினார். ஆனால் என் பாட்டி “ஆமாம்! அவர் அப்படித்தான் சிறைக்குப் போவார். ஆனால் சீக்கிரம் திரும்பி வந்திடுவார். நீங்க கவலைப் படாதீங்க’’ என்று கூறி அவரைத் தேற்றினாராம்.

என் தந்தையாருக்கு மிகவும் பிடித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் பாரதியார்;மற்றொருவர் இந்தக்காமாட்சிப் பாட்டி. இந்தப்பாட்டி மருமகனைக் கண்டால் அஞ்சி நடுங்குவார். ‘‘மருமகன் எங்கே கோபித்துக் கொள்வாரோ! எங்கே சாப்பிடாமல் போய் விடுவாரோ! எங்கே பழனியம்மாளை வேண்டாம் என்று சொல்லிவிடு வாரோ!” என்றெல்லாம் வீணாக அச்சப்படுவாராம்.

மாமியார் வீட்டுக்குச் சென்றுவிட்டுப் புதுவை திரும்பியதும் “உங்கபாட்டி என்னைக்கண்டு ரொம்ப நடுங்குறாங்க. அதனால நா ரொம்ப அமைதியா இருந்துட்டு வந்த ..?’’ என்று எங்களிடம் தந்தையார் கூறுவதுண்டு.

உணவுப் பழக்கத்தில் என் தந்தையாருக்கு ஒரு கட்டுத் திட்டம் கிடையாது. ஒரு நாளைக்கு அதிகாலையில் தேநீர் கேட்பார். அடுத்தநாள் அதே நேரத்தில் தேநீர் கொண்டுபோய்க் கொடுத்தால், ‘உங்களை யார் இப்போது தேநீர் கேட்டார்கள்?’ என்று திட்டுவார். எப்போதாவது என் தாயாரைக் கூப்பிட்டு, ‘‘பழனியம்மா! கைகால் வலிக்குது. ஏதாவது பண்ணு!’’ என்றுசொல்லுவார்."என்ன செய்வது?’ என்று என் தாயார் கேட்டால் ஏதாவது செய்' என்று சொல்லுவார்.

காலையில் இட்டிலி சாப்பிடும் போது தேங்காய்ச் சட்டினி வெங்காயச் சட்டினி, தயிர்,மிளகாய்ப்பொடி, உருக்கு நெய், பழைய மீன் குழம்பு இத்தனையும் கேட்பார். சாப்பிட்டு முடித்ததும் எண்ணெய்ப் பசை படிந்த கையை அழகாக வெளுத்த வேட்டியிலே கறைபடும்படி துடைத்துக்கொள்வார். இதைப் பல முறை பார்த்த பிறகு, இது நம் குறையே எண்றுணர்ந்து அவர் சாப்பிட்டு முடித்ததும் சோப்புக்கட்டியும் துண்டும் கொண்டுபோய்க்