பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/62



நடு இரவில் பல் தேய்த்துவிட்டுச் சாப்பிடுவார். "இப்ப அழுத்திப் பல் தேச்சுட்டுக் காலையிலே லேசா துலக்கினாப் போச்சு!" என்று சிரித்துக்கொண்டே சொல்வார். எந்த வேலையையும் அனாவசியமாக நீட்டிக் கொண்டிருப்பது என் தந்தையாருக்குப் பிடிக்காத ஒன்று. பல் தேய்ப்பதாக இருந்தாலும், குளிப்பதாக இருந்தாலும், உடையுடுத்துக்கொள்வதாக இருந்தாலும் விரைவில் சுறுசுறுப்பாகச் செய்து முடிக்கவேண்டும்; இல்லாவிட்டால் கண்டிப்பார்.

சில சமயங்களில் எங்கள் வீட்டில் சமையல்காரர்கள் இருப்பார்கள். என் தத்தையாரின் சுவைக்கு ஏற்பச் சமையல் செய்ய முடியாமல் அவர்கள் விழிப்பார்கள். கோழியை அறுத்துத் துண்டு போடுவதிலும் கூட என் தந்தையாரின் விருப்பமறிந்து துண்டு போட வேண்டும்; இல்லாவிட்டால் திட்டுவார்; கோழிக்கறியைச் சமையல்காரன்தான் சமைக்கவேண்டும். நானோ என் தாயாரோ அதில் தலையிடக்கூடாது. ஒருநாள் கோழிக்கறி சமைக்கும்போது என் தாயாரை உப்புப் போட அனுமதித்ததற்காக அச் சமையல்காரனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார். எங்கள் வீட்டில் வேலை செய்த சமையல்காரர்களுக்கு, அவர்கள் வைக்கும் குழம்பைவிட நாங்கள் வைக்கும் குழம்புதான் மிகப்பிடிக்கும்.

ஒருமுறை என் தந்தையாரிடம் நற்சான்றிதழ் பெற்றுச் செல்வதற்காக ஒரு சமையல்காரன் வந்தான். "இரண்டு நாள் வீட்டிலிருந்து சமைத்துப்போடு. உன்னுடைய சாப்பாடு எப்படி இருக்கிறது என்று சுவைத்துப் பார்த்து விட்டுச் சான்றிதழ் தருகிறேன்" என்று என் தந்தையார் கூறினார். முதல்நாள் சமைப்பதாகச் சொல்லி அன்றைய உணவை அவன் பாழடித்தான். ஒரு பெரிய உருண்டை புளியை எடுத்துப் பாத்திரத்தில் ஊறவைத்திருந்தான். அப்போது எதேச்சையாக உள்ளேவந்த என் தந்தையார் அதைப்பார்த்துவிட்டு எதற்காக இவ்வளவு புளி ஊற வைத்திருக்கிறாய்?’ என்று அவனைக் கேட்டார். குழம்-