பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/72


பேசினால் அழுவார். 'சாகிறேன்’ என்று யாராவது சொன்னால் பேடித்தனம் என்பார்.

ஆடை, மீசை ஆகியவற்றின் மீது என் தந்தையார் அதிக அக்கறை காட்டுவது வழக்கம். அவர் அணியும் மேற்சட்டை (Long Coat) அவர் விருப்பப்படி தைக்கப் பட வேண்டும். அவர் விருப்பத்துக்குக் கொஞ்சம் மாறாக இருந்தாலும், தூக்கித் தையற்காரன் முகத்தில் வீசி எறிந்து விடுவார். அவருடைய மீசையை ஒழுங்கு செய்யும்போது சவரத் தொழிலாளி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்குக் கடுமையான கோபம் வந்து விடும். மீசை ஒழுங்காக வெட்டி விடப்பட்டிருக்கிறதா என்று கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பார்ப்பார்.

என் தந்தையார் ஒரு கறவை மாட்டைப் போன்றவர். கறவை மாட்டை எவ்வளவுக்கெவ்வளவு கவனமாகப் பேணுகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அது பால் கொடுக்கும். 'அப்பாவிடம் கல்வியும் செல்வமும் சேர்ந்திருக்கிறது. அவரை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று என் தம்பியிடமும், தங்கைகளிடமும் நான் அடிக்கடி கூறுவதுண்டு. அவரைச் சரியாகக் கவனிக்கவில்லையென்றால் எழுதமாட்டார்.