பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77/பாடிப்பறந்த குயில்



என் தந்தையாருக்குச் சோதிடத்தில் ஈடுபாடு கிடையாது. எனினும் சோதிடம் வல்லார் ஒருவர் அவருக்கு நெருங்கிய நண்பர். அச்சோதிடர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார் சாப்பாட்டு வேளைக்கு சோதிடமும் சொல்வார்; உணவுண்டும் செல்வார். கவிஞரைத்தவிர, புதுவையில் உள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாவருக்குமே அவர் சோதிடம் கூறுவதுண்டு.

அவரிடம் கவிஞருக்குப் பிடிக்காத 'அம்சம்' ஒன்று உண்டு! அது 'நீ பயப்படாதே சுப்புரத்தினம்’ என்று அவர் சொல்லுவது தான்.

சோதிடர் நெடுநாளைய நண்பர் என்பதோடு, கவிஞரை விட வயதில் மூத்தவர். இவற்றையெல்லாம் கருதி கவிஞர் ஒன்றும் சொல்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்து விடுவார். ஒருநாள் கவிஞருக்குப் பள்ளி விடுமுறை. வழக்கப்படி சோதிடப் புலி வந்தது. கவிஞரும் அவரும் ஏதேதோ பேசிக்கொடிருந்தார்கள்.

வழக்கப்படி சோதிட நண்பர் "சுப்புரத்தினம்! நான் .......... பிள்ளை வீட்டுக்குப் போனேன். எலக்சியம் (தேர்தல்) சம்பந்தமாகப் பேசிக்கிட்டிருந்தோம்! அவரை எதிர்த்து நிக்கிறவன் சாய்கால் உள்ள ஆளாம்! கொஞ்சம் கவலைப்பட்டார். நான் சொன்னேன். பயப்படாதே! உனக்கு இன்ன ராசியில் இன்னார் இருப்பதால்...... !" என்று நிறுத்தினார்.

கவிஞர் எதிர்நோக்கியிருந்த நேரம் வாய்த்து விட்டது, திடுமென்று சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து விட்டார். “ஏண்ணே(ன்) உனக்குக் கொஞ்சமாவது அறிவு கிறிவு இருக்கா? எவ்வளவு பெரிய ஆள் அவன்! இந்த சோசியத்தை நம்பியா 'பொலீத்திக்' [1](அரசியல்) பண்றான்! நிலைமையை உங்கிட்ட சொன்னான். அதுக்கு


  1. எலக்கியம், பொத்திக் என்ற இரண்டு சொற்களும் பிரெஞ்சுச் சொற்கள்.