பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79/பாடிப்பறந்த குயில்



திருந்தார். அவ்விருந்துக்குக் கவிஞரும் அழைக்கப்பட்டிருந்தார். எல்லாம் தூய நெய்யால் சமைக்கப் பட்ட உயர்தரப் புலால் உணவுகள்.

கோழி ரோஸ்ட் பரிமாறப்பட்டது. கவிஞர் சுவைத்து உண்டு கொண்டிருந்தார். அளவுக்குமீறி நெய் சேர்க்கப்பட்டிருந்ததால் கவிஞருக்கு உணவு தெவிட்டத் தொடங்கி விட்டது.

விருந்து வைத்தவர் இதைப் பார்த்தார். அருகிலிருந்த ஊறுகாய்த் தட்டத்தைக் கவிஞர் அருகிலே நகர்த்தி வைத்து “முசியே![1] இந்த ஊறுகாயைக் கொஞ்சம் சாப்பிடுங்கள்; சரியாகி விடும்!’ என்றார்.

புளிப்புச் சுவையுள்ள ஊறுகாயைக் கவிஞர் சிறிது வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டார். சில வினாடிகள் கழித்து மீண்டும் கவிஞர் கோழியைச் சுவைக்கத் தொடங்கினர். திரு. உசேன் இதை மிக மகிழ்ச்சியோடு கண்டு களித்துக் கொண்டிருந்தார்.

கவிஞர் திடீரென்று “அட! கோழியை ஊறுகாய் வாழ வைத்துவிட்டதே!” என்றார், கவிஞர் சொன்ன கருத்தின் பொருள் விளங்காமல் விழித்தார் விருந்து வைத்த நண்பர்.

பாவேந்தர் இயற்கையெய்திப் பல ஆண்டுகள் கழித்து 22-4-68 இல் புதுவையில் நடைபெற்ற பாவேந்தர் நினைவு விழாவில் திருவாளர் உசேன் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். அப்போது இவ்விருந்து நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து பின் கண்டவாறு கூறினர்.

“பாவேந்தர் கூறிய கருத்தின் பொருள் அன்று எனக்குப்


  1. முசியே என்பது Monsieur என்ற பிரெஞ்சுச் சொல்லின் தமிழ் ஒலிப்பு. "ஐயா என்பதே அதன் பொருள்.