பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/86



எட்டிப் பார்த்த போது அரவிந்தர் வீட்டிலிருந்து களவாடப்பட்ட புத்தகங்களும்,பக்கத்தில் ஒரு கைத்துப்பாக்கியும் இருக்கக் கண்டு, பளிச்செனத் தோன்றிய ஒரு தந்திரமாக, அவற்றை எடுத்துக் கொண்டு வந்துவிட்டோம். மறுநாள் மாடசாமியிடம் அந்தத் துப்பாக்கியைத் தந்து ஈஸ்வரன் தருமராஜா கோவில் தெருவிலிருக்கும் பாரதி வீட்டுக்குச் சென்றோம். துப்பறிவோரும் மயூரேசனும் தொடர்வது தெரிந்தது. எதிரிலிருந்த காமாட்சியம்மன் கோவிலில் புகுந்து அதற்கருகிலிருந்த ஒரு வீட்டில் மாடசாமியை ஒளித்துவிட்டேன். மீண்டும் காமாட்சியம்மன் கோவில் உட்புறம் நுழைந்து சுற்றுமதிற்கவர்மீது ஏறிப்பக்கத்தில் உள்ள தெருவில் குதித்து விட நினைத்தேன். கோவிலுக்குள்ளே வந்து விட்டான் மயூரேசன்.

கண் இமைக்கும் நேரம். மிகஉயர்ந்த மதிற்சுவரினின்று கீழே குதித்தேன். ஒட்டமாக ஓடிப் பாரதி வீட்டிற்குள் புகுந்தேன். வெகுநேரங் கழித்து மாடசாமியை மீட்டு வீடுவந்து சேர்ந்தேன்.

மறுநாள் பாரதி என்னைப் பார்த்து, "மீண்டும் இந்த உயரத்திலிருந்து உன்னால் குதிக்க முடியுமா? உனக்குள் கனன்று கொண்டிருந்த புரட்சி எண்ணம் உன் காலுக்கு வலிமையூட்டியுள்ளது!" என்று கூறினார்.

O

மக்கள் நலனுக்கான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவதில் பாவேந்தர் மிகவும் துணிச்சலானவர்; எத்தகைய எதிர்ப்புக்கும் அஞ்சாதவர். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. தேவிகுளம் பீர்மேட்டைத் தமிழகத்தோடு இணைக்கவேண்டும் என்பதற்காக ஒரு கடையடைப்புப் போராட்டத்தைப் பாவேந்தர் புதுவையில் நடத்தினார். புதுவையில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுபடுத்திக் கிளர்ச்சி