பக்கம்:அரும்பு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அசைவுகளை அவள் இயற்கையாகவே பெற்றிருந்தாள். அதைக் காணும் கோகுலுக்கு அதிசயமாகவே இருந்தது. மங்கை, சிகரெட்டைத் தேடி எடுத்தாகவில்லை. அதற்குள் உள்ளே பயங் கரமான இருமல் சத்தம் கேட்டது. அவள் சிறிது தயங்கி உள்ளே திரும்பினாள். மீண்டும் இருமல் பலமாகக் கேட்டது. சிகரெட் டைத் தேட அவளால் இயலவில்லை. கோகுலைப் பார்த்து, 'தயவு செய்து நீங்களே சிகரெட்டைத் தேடி எடுத்துக்கொண்டு, காசைப் பெட்டியிலே போட்டுவிடுங்கள் ! என்று கூறிவிட்டு, அவன் பதிலுக்கும் காத்திராமல் உள்ளே ஓடிவிட்டாள். கோகுல் ஆச்சரியத்தால் மரம் போல் நின்றுவிட்டான். மேல்நாடுகளிலே இது போன்ற முறையைக் கேள்விப்பட்டிருக்கிறான் அவன். தினசரிப் பத்திரிகையும், ஒரு காசுக் கிண்ணமும் சாலையோரத்தில் வைக்கப் பட்டு இருக்குமாம். தேவையானவர்கள் காசைப் போட்டுவிட்டுப் பத்திரிகையை எடுத்துப் போவார்களாம். 'இங்கே நம் நாட்டில், பூட்டப்பட்டுப் புதைக்கப்பட்ட சாமி உண்டியல்களையே பெயர்க் காமல் இருந்தால் போதாதா ? பட்டணவாசிகளும் கற்றுக்கொள் ளாத நாகரிகத்தை இந்தப் பட்டிக்காட்டு மங்கை எப்படித்தான் ஆசிரியரின்றிக் கற்றுக்கொண்டாளோ, தெரியவில்லை !' - என்று சிந்தித்தபடி நின்றான் கோகுல். கையிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தைப் பெட்டியிலே போட்டுவிட்டு, ஓர் ஒடிந்துபோன சிகரெட்டைத் தேடி எடுத்து, அதை அந்தச் சிறு விளக்கிலே பற்ற வைத்தபடித் திரும்பினான் ரயிலடி நோக்கி ! அவன் ஓர் அடிகூட எடுத்து வைத்திருக்க மாட்டான். அதற்குள் அந்தக் குடிசைக் குள்ளிருந்து “அய்யோ ! அப்பா ! அப்பா ! ! ” என்னும் அலறல் வந்தது. சப்தம் போட்டது அவளாகத்தான் இருக்கவேண்டும். அவள் குரல்தான் அது ! கோகுல் தன்னை மறந்தவனாய் உள்ளே ஓடினான். "" வயதான கிழவர் ; படுக்கையிலே பிரக்ஞையற்றுக் கிடக்கிறார். அவர் மார்பிலே தலையைச் சாய்த்துக்கொண்டு அந்தப் பெண் அலறுகிறாள். 'ஓகோ, செத்துவிட்டார் போலும்!' என் நினைத்துக் கோகுல் அருகே போனான். அவளோ, அய்யோ அப்பா ! அப்பா !” என்று அலறிக்கொண்டே யிருந்தாள். கோகுல் கிழவரின் முகத்திலே கையை வைத்துப் பார்த்தான். அவர் சாக வில்லையென்பதைப் புரிந்துகொண்டான். உடனே அவளைப் பார்த்துப், "பயப்படாதேயம்மா ! உன் அப்பா சாகவில்லை. மயக்கம்தான் !” என்று ஆறுதல் கூறினான். அவளுக்குச் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. தந்தையைத் தொட்டுப் பார்த்தாள். அவன் கூறியது உண்மைதான் ! "" 'அய்யா ! கொஞ்ச நேரம் அப்பாவைப் பார்த்துக் கொள் களுங்கள் ....நான் ஒரே ஓட்டமாக ஓடி, வைத்தியரை அழைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/10&oldid=1699631" இலிருந்து மீள்விக்கப்பட்டது