________________
5 வந்துவிடுகிறேன்” என்று கெஞ்சினாள் அவள். கோகுல் முடியாது என்று சொல்ல முடியுமா ? மிகமிக நெருக்கடியான சூழ்நிலை! ரயில் நிலையத்திலே ரயில் வரப்போகிறது என அறிவிக்கும் மணி ஒலிப் பது அவன் காதிலே விழுந்தது. இருந்தாலும் அவளுடைய பரிதாபகரமான வேண்டுகோளை அவனால் மறுக்க முடியவில்லை. சரியென்று தலையசைத்தான். அவள் ஓடினாள். சிறிது நேரத்திற் கெல்லாம் அவள் வைத்தியருடன் திரும்பி வந்தாள். வைத்தியர், கிழவருக்கு ஏதேதோ சிகிச்சைகள் செய்து, மயக்கத்தைத் தெளிவித்தார். கிழவரும் மெதுவாகக் கண் விழித்து “கோமதி!" என அழைத்தார். அவளும் 'அப்பா' என அழைத்துத் தாவினாள் கிழவரின் படுக்கையிடம் ! "கோமதி கோகுலின் உதடுகள் அந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்துக்கொண்டன. வைத்தியர் போய் விட்டார். கோமதி நன்றியொழுகும் கண்களால் கோகுலைப் பார்த்தாள். கோகுல் அந்த ஏழைக் குடும்பத்தின் இளஞ்சிட்டை இருதய பூர்வமாக வாழ்த்திவிட்டு “நான் வருகிறேனம்மா !" என்றான். படுக்கையிலிருந்த தந்தை, "யார் கோமதி அது ? என்று ஈனசுரத்தில் கேட்டார். ‘‘யாரோ வழிப்போக்கு அப்பா ! ரொம்ப நல்லவர் ! நான் வைத்தியரை அழைத்து வரும் வரையில் அவர்தான் உங்களுக்குக் காவல் இருந்தார் !” என்று கூறிக்கொண்டே, கோமதி கோகுலுக்கு மீண்டும் பார்வையினால் நன்றி செலுத்தினாள். விசாரித்துவிட்ட பிறகு கிழவரிடம் பேசாமல் போகக் கூடாதே யென்ற நினைவில், கோகுல் அவரிடம் "என்ன பெரியவரே ! எப்படியிருக்கிறது உடம்பு ?" கேட்டான். "எப்படியிருக்கு ? இப்பவா கொஞ்சநாழியான்னு தான் இருக்கு! என்று "பயப்படாதிங்க ; சரியாப் போய்விடும். ரயிலுக்கு நேரமா வுது - நான் வர்றேன் ! இதைக் கூறிவிட்டு, கோமதியையும் பார்த்தபடி அவன் வெளியே வந்தான். ரயிலை எப்படியும் பிடித்துவிட வேண்டு மென்று, ரயில் நிலையத்தை அங்கிருந்தபடியே நோக்கினான். அப்போதுதான் ரயில் அந்த நிலையத்தை விட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. இனி அதனைப் பிடிப்பது முடியாது என்ற ஏமாற்றத்தோடு திகைத்து நின்றான். கடையோரத்தில் அவள் நின்றுகொண்டு, "எங்களால்தான் உங்களுக்கு இப்படி ஆகி விட்டது !” என்று அனுதாபம் தெரிவித்தாள். கோகுலுக்கு ரயில் தவறியதுகூட மறந்துவிட்டது. அந்த அனுதாபச் சொற்கள் அவன் இருதயத்தை ஊடுருவிப் பாய்ந்தன. "பரவாயில்லை. அதனால் என்ன..வருகிறேன் !'x என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்த்தான்.