________________
"ஏன் இங்குத் திண்ணையிலேயே படுங்களேன்! தானே ரயில் ! என்றாள் அவள். காலையிலே "காலை ரயிலில் போயும் பிரயோசனமில்லை. மாயவரத்திலே மதறாஸ் மெயிலைப் பிடிக்க வேண்டுமானால் -நாளை இரவு ரயிலில் தான் போயாக வேண்டும். காலையில் போனால் எங்காவது காத் திருக்கவேண்டியதுதான் !” என்றபடி கோகுல் திண்ணையில் வந்து உட்கார்ந்தான். உள்ளேயிருந்து இருமல் ஒலி கேட்கவே, கோமதி ஓடினாள். கோகுலும் பின்னால் சென்று கவனித்தான். கிழவர், கோகுலைப் பார்த்து, நீ போகவில்லையா தம்பீ ?" என்று பரிவோடு கேட் டார். "அவருக்கு நம்மால ரயில் தவறிப் போய்விட்டதப்பா ! இனிமேல் நாளை ரயில்தான். பாவம் !" என்றாள் கோமதி ! "அப்படியா ? அய்யோ பாவம் !” என்று கிழவர் அருகே உட்காரச் சொன்னார் அவனை ! கோகுலுக்கும் தூக்கம் வரவில்லை. கிழவர் இருமிக்கொண்டே, அவனைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டார். கோமதியை நினைத்தால்தான் தனக்குப் பயமாக இருக்கிறதென்றும், ஓநாய் களுக்கு இடையே மான் குட்டியை வைத்துக் காப்பாற்றுவது போல அவளைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறதென்றும் சொல்லி அழுதார். 'தாயை இழந்த கோமதியை இத்தனை நாள் பாது காப்பாக வளர்த்து விட்டேன். போதுமான அளவுக்குப் படிக்க வும் வைத்துவிட்டேன். அவளை ஒரு நல்ல பையன் கையிலே பிடித்துக் கொடுக்காமல் போறேனே! -அதுதான் எனக்குக் கவலை ! என்று கண்ணீர் வடித்தார். " வெகுநேரத்திற்குப் பிறகு, கோகுல் திண்ணையிலே போய்ப் படுத்துக்கொண்டான். தூக்கமே வரவில்லை அவனுக்கு! ஏதேதோ எண்ணச் சுழற்சிகள் ! குழந்தை குமார் - கோமதி. இருவருமே மாறி மாறி வரவேண்டிய காரணம் என்ன ? விடியற்காலையில் தான் தூக்கம் அவன் கண்களைத் தழுவ ஆரம்பித்தது. ஆனால், திடீரென்று கேட்ட கோமதியின் அலறல் அவனைத் திடுக்கிட்டு எழச் செய்தது. கதவைத் தட்டினான். கதவைத் திறந்துவிட்டு, 'அப்பா ! அப்பா !" எனக் கதறினாள். கோகுல் கிழவரிடம் ஓடிப் பார்த்தான். உடல் ஜில்லிட்டுப் போயிற்று. கிழவர் போய்விட்டார். எதிர்பாராத ஒரு சுமை கோகுலுக்கு ! நல்ல வேளை, ரயில் மாலையில்தானே! கிழவரை அடக்கம் செய்யவேண் டிய காரியங்களைக் கவனித்தான். அவனது பேருதவியுடன் கோமதியின் தந்தை அடக்கம் செய்யப்பட்டார். ஊர்மக்கள் சிலர் வந்து, கோமதிக்கு நேராக ஒப்பாரி வைத்துவிட்டுப் போய்