பக்கம்:அரும்பு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7 விட்டனர். தந்தையின் பிரிவால் கோமதி, தணற்புழுவாகத் துடித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு இருந்த ஒரே ஒரு துணை- அதுவும் போய்விட்டது! இரவு வந்தது ! திண்ணையிலேயே பொழுதெல்லாம் உட்கார்ந் திருந்த கோகுல், எழுந்து உள்ளே வந்தான். கோமதி அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான். 'கோமதி!" என்றான், குரல் கம்மிய நிலையில் ! அப்போதுதான் அவளுக்குக் கோ குலைப் பற்றிய நினைவு வந்தது. 'அய்யோ, யாரோ ஒரு பரோபகாரி, இவ்வளவு உதவிகள் செய் திருக்கிறார். அவருக்கு ஒரு வேளை சாப்பாடுகூடப் போடவில்லை ! சாப்பிடுகிறீர்களா என்றும் கேட்கவில்லையே !' என்று அவள் மனச்சாட்சி பேசிற்று. எழுந்து நின்றாள், கண்ணீர் வடித்தபடி! "நான் வரட்டுமா, கோமதி ?” - கோகுல் முடிக்கவில்லை ; அதற் குள் அவன் கால்களிலே விழுந்துவிட்டாள் அவள் ! "இன்னும் இரண்டு நாளைக்கு இருங்கள் ; எனக்குச் சிறு ஆறுத லாகவாவது இருக்கும்! கோகுல் மெளனமாகிவிட்டான். அசைவற்றுப் போனான். திருக்குவளை நண்பன் ரத்தினம் நூறு தடவை சொன்னான், இரண்டு நாள் இருந்துவிட்டுப் போ' என்று ! அதைக் கேட்க வில்லை ; மறுத்துவிட்டான். இப்போது அசைவற்று நிற்கிறான். அவன் யார் ? எங்கிருந்து வந்தான் ? கொதிக்கும் குண்டத்தின் ஓரத்திலே தூக்கி எறியப்பட்டவன் அவன்அதே நெருப்பு ஜுவாலைக்கருகில், கருகிக்கொண்டிருக்கும் மலராகக் கோமதியிருந் தாள். சந்தர்ப்பம் இப்படி ஒரு சூழ்நிலையைப் படைப்பித்துக் கைதட்டி ஆரவாரம் செய்தது. அவன் கண் எதிரே குழந்தை குமார் வந்து போனான். “ஏன், பேசாமலிருக்கிறீர்கள்?. . நீங்கள் நேற்று இரவு முதல் செய்த உதவிகள் பெரிதல்ல ! . . . அனாதையாகப் போய்விட்ட எனக்கு.... எனக்கு எனக்கு. !" கோமதி விக்கிவிக்கி அழுதாளே தவிரப் பேச்சை முடிக்கவில்லை! சாகப்போகும் நேரத்தில் தன் அருமை மகளைப் பற்றி அந்தக் கிழவர் கூறிய வார்த்தைகள் அவன் நெஞ்சைக் குடைந்து கொண்டே இருந்தன. “அழாதே கோமதி! நான் இரண்டு நாட்கள் இருக்கிறேன்” என்று அவளைத் தூக்கி நிறுத்தினான். வழிந்துகொண்டே யிருந்த கண்ணீரைத் துடைத்தான். அப்போது அவன் கைகள் நடுங் கின ....கண் எதிரே குமார் வந்து நின்று, “அப்பா !” என்று கூப்பிடுவது போல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/13&oldid=1699634" இலிருந்து மீள்விக்கப்பட்டது