________________
11 கிழவர் செத்துவிட்ட துக்கம் விசாரிக்க, அயலூரில் இருந்து ஒரு பாட்டி வந்திருந்தாள். கோமதிக்கு அவள் தூரத்து உறவு அவள் கேட்டாள், "இந்தப் பிள்ளையாண்டான் யார் ? என்று, கோகுலைக் காட்டி! 'தூரத்து உறவு, பாட்டி ! அண்ணன் முறை !' என்று சொல்லிவிடலாமோ என எண்ணினாள் கோமதி ! ஏனோ அப்படிச் சொல்ல அவள் மனம் இடந்தரவில்லை. “பட்டணத்திலேயிருந்து வந்திருக்கிறார். எங்க அத்தை மகன் !” என்று கோமதி, பாட்டியிடம் சொல்லியதைத் திண்ணையி லிருந்தபடியே கோகுல் கேட்டுத், தனக்குத்தானே மகிழ்ந்து கொண்டான். பாட்டி ஊருக்குப் போய்விட்டாள் ! “அத்தை மகன்' கோகுலுக்கு அந்த வார்த்தைகள் எத்தனையோ இன்பக் கதைகளைச் சொல்லத் துவங்கின. கோமதியும் கோகுலும் சேர்ந்து சென்னைக்குப் புறப்படுகிற வரையிலே அந்தக் கதைகள் நீண்டன. கோகுல், அவளுக்கு அத்தை மகனாகவே ஆகிவிடத் தீர்மானித்து விட்டான்'. தனியாக வந்த கோகுல் கோமதியுடன் சென்னைப் பயணத்தைத் துவக்கினான். இருவரின் வாழ்க்கைப் பயணமும் ஆரம்பமாயிற்று ! இருவரும் வண்டியிலிருந்து இறங்குவதை வேலைக்காரனும் வேலைக்காரியும் பார்த்துவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் வியந்து நோக்கிக்கொண்டனர். கோமதியை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் கோகுல் ! அவர்களுக்கு உள்ளுற மகிழ்ச்சி தான் ! "குமார் எங்கே ?" என்று கேட்டபடி கோகுல் உள்ளே நுழைந்தான். "இப்பத்தான் பள்ளிக்கூடம் போச்சு !” என்றாள் வேலைக்காரி. சுவரிலே மாட்டப்பட்டிருக்கும் தன் மூத்த மனைவி யின் படத்தை அண்ணாந்து பார்த்தான் கோகுல் ! அங்கே பட மில்லை ! தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு ! ‘“படம் என்ன ஆயிற்று? வேலைக்காரன் சொன்னான்: "குழந்தை, படத்தைப் பார்த்துப் பார்த்து அழுவது அதிகமாயிடுச்சுங்க ! அதனால் அதை மறைச்சு விட்டேங்க ! ” என்று ! கோகுலின் கண்களில் நீர் ததும்பிற்று ! “என்ன படம்?’' என்று கேட்டாள் கோமதி. “உங்க அக்கா படம்!” என்றான் அவன். வேலைக்காரனிடம் கேட்டு, அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தாள் கோமதி. அவள் கண்களும் கலங்கின. "பூவோடும் பொட்டோடும், மஞ்சளோடும் மாங்கல்யத்தோடும் போயிட் டாங்க எங்க அம்மணி !” என்று அழுதாள் வேலைக்காரி ! "நீங்க வந்திருக்கீங்க தாயே ! நீங்களும் மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க. எங்க சின்ன எஜமானை. . அய்யாவோட செல்லக்