________________
14 பள்ளிக்கூடத்தில் பாலபுத்தரைப் போல் உட்கார்ந்திருப்ப தில்லை வீர நெப்போலியனைப் போல் விஷமங்கள் செய்கிறான். வீடு திரும்பும்போது, சிறுவர்களை அவர்கள் தாயார் உபசரித்து வரவேற்பதை இப்போதெல்லாம் குமார், வெகு அலட்சியத்தோடு பார்த்துவிட்டுக் கம்பீரமாக நடக்கிறான். முன்பெல்லாம் குமார் ஓர் இலை ; ஒரு மொட்டு. இப்போது இரு இலை ; ஒரு மொட்டாக ஆகிவிட்டான்! இரவு வெகுநேரம் வரையில் கோமதியின் வருகைக்காகக் கோகுல் விழித்திருக்க வேண்டியிருந்தது - படுக்கையறையில் !' காரணம், குமாருக்குக் கதை சொல்லி -பாட்டுப் பாடித் தூங்க வைத்துவிட்டுத்தான் அவள் கோகுலிடம் வருவாள். கோகுலுக்கு. அதில் கொஞ்சம் வருத்தங்கூட ! ஆனாலும் வீட்டிலே குமாருடன் விளையாடுவதற்கு ஒரு பாப்பா வரப்போவதாக வேலைக்காரனும் வேலைக்காரியும் குமாரிடம் அடிக்கடி அறிவித்து வந்தார்கள். அந்தப் பாப்பா எங்கிருந்து வரும் ? எப்படி வரும் ? அது எப்படி இருக்கும் ? என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதன் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான் குமார். பிரசவ ஒரு நாள், கோகுல் அலுவலகத்திற்கு 'லீவு' போட்டுவிட்டு வீட்டிலேயே தங்கி விட்டான். கோமதிக்கு அன்று வேதனை அதிகமாகிவிட்டது. குமாருக்கு ஒன்றும் புரியவில்லை 'அம்மா ஏன் இப்படிக் கத்துகிறது ? - அப்பாவைக் கேட்டான்.. வேலைக்காரர்களைக் கேட்டான். பெரிய சாக்ரட்டீசாக இருந்தால் தான் என்ன; குழந்தையின் தர்க்கவாதக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட முடியுமா என்ன? குமாருக்குச் செயல் மூலம் பதில் சொல்லிக் கோமதி, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகிவிட்டாள். குமார் எதிர்பார்த்திருந்த பாப்பா வந்துவிட்டது. " 'அம்மா, அம்மா! பாப்பாவை என்னோட பள்ளிக்கூடம் அழைச்சிக்கிட்டுப் போகலாமா ?' குமாரை முத்தமிட்டுக்கொண்டே கோமதி, "இப்போது வேண்டாண்டா ராஜா !” என்று தழுவிக்கொண்டாள். அந்த. அன்பு ஸ்பரிசத்திலே அந்த அரும்பு மெய்ம்மறந்து போயிற்று. ஒருவருக்கொருவர் சமமாகப் பலமும், வளமும் இருக்கும் போதே பொறாமை உணர்ச்சி தலை காட்டுகிற இந்த உலகில், குமாரை விடத் தன் குழந்தை பலவீனமாகவும், வளமற்றும் இருப்பதைக் காணும் கோமதிக்கும் அதுபோன்ற பொறாமைக் கனல் அவளையுமறியாமல் மூண்டதில் ஆச்சரியமில்லைதான் ! பாப்பா பிறந்தது முதல், அதற்கு நீங்காத நோய்தான்! அதைக் கவனிப்பதிலேயே அவளுக்கு நேரம் முழுவதும் செலவா