________________
15 “என் யிற்று. தன் குழந்தையின் நோய் நீங்கிட, கோகுல் நல்ல டாக்ட ரிடம் காட்டவில்லை என்ற வருத்தம் வேறு அவளுக்கு ! குழந்தைன்னா உங்களுக்குத் தள்ளுபடி !” என்று ஒருநாள் அவள் கோபமாகப் பேசிவிட்டாள் கணவனிடம்! “என் குழந்தை” இந்த வேறுபாடான வார்த்தைகள் கோகுல் உள்ளத்தில் சம்மட்டி அடிபோல விழுந்தன; பெண்கள் தங்களுக்கொரு குழந்தை பிறக்கும் வரையில்தான் மற்றக் குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறார்கள். அப்படி அன்பாக இருந்தால்தான் குழந்தை பிறக்கும் என்ற பழைய நம்பிக்கைதான் அதற்குக்கூடக் காரணம் போலும்! எல்லாக் குழந்தைகளிடமும் எப்போதும் அன்பாயிருக்கவேண்டும் என்ற புதிய எண்ணம் பெண்கள் உள்ளத்திலே வளராதா ? - - இப்படிப் பெண்கள் சமுதாயத்தைப் பற்றியே மொத்தமாக ஒரு கணக்குப் போட்டுக்கொண்டு சிந்தனையிலாழ்ந்தான் -கோகுல்! ‘என் குழந்தை உன் குழந்தை' எனப் பிரித்துப் பேசுகிற அளவுக்கு வந்துவிடுவாள் கோமதி என்று அவன் நினைக்கத் தானில்லை ! 'அம்மனூர் கோமதி எங்கேயோ போய்விட்டாளே ! அம்மா ஸ்தானத்தில் வைத்துக் குமார் மகிழ்ந்த அந்தக் கோமதி ஏன் மறைந்துவிட்டாள்?' கோகுல், குமுறும் கடலானான் ! பாப்பா வந்துவிட்டதால், குமாரிடம் கோமதி காட்டுகிற அன்பு குறைந்திருக்கத் தேவையில்லைதான் ! ஆனாலும் பாப்பாவின் உடல் நிலை கோமதியை அந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டது ! - ஒருநாள், படுத்திருந்த பாப்பாவைக் குமார் மிகவும் சிரமப் பட்டுத் தூக்கிக்கொண்டு தெருப்பக்கம் போனான். அதைப் பார்த்த கோமதிக்குக் கோபம் வந்துவிட்டது - “டே மூதேவி ஏண்டா குழந்தையைத் தூக்கிக்கிட்டுப் போயிகொல்லப்போறே? என்று அலறியபடி குழந்தையைப் பிடுங்கிக்கொண்டு உள்ளே வந்ததைப் பலகணி வழியே பார்த்தான். 'ஏதோ தப்புச் செய்து விட்டோம் போலிருக்கிறது, அதுதான் அம்மா திட்டுகிறார்கள்!'.. என்று குமார் நினைத்துக்கொண்டு, இளம் வாய் சிரிப்பைக் காட்ட, இருவிழியும் நீரைக்கொட்ட அப்படியே நின்றுவிட்டான். ‘மூதேவி’ என்பதற்குப் பொருள் அந்த மொட்டுக்கு என்ன தெரியும்? கோமதிக்குத் தன் குழந்தையைப் பற்றிய ஏக்கம் அதிகமாகி விட்டது. நாளுக்கு நாள் அது உடல் மெலிவதை அவளால் சகிக்க முடியவில்லை. ஒருநாள் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் கண்டது. மனங்கொதித்த கோமதி, நல்ல டாக்டர் யாரை யாவது அழைத்து வரக்கூடாதா என்று கணவனைக் கடிந்துகொண்