பக்கம்:அரும்பு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 அழுதுகொண்டே யிருக்கிறாரே ! அதற்கும் அவன்தானே காரணம்! கோகுல் எவ்வளவோ முயன்றும் அவனைச் சமாதானப்படுத்த முடியவில்லை. அவ குழந்தை போய்விட்டது - அழுவதால் வரப்போகிறதா கோமதி ? குமாரைச் சமாதானப்படுத்து ! அவன் அப்படியே ஏங்கிவிட்டான் !' என்று தழுதழுத்த குரலிலே கோகுல் ளிடம் வேண்டிக்கொண்டான். பயனில்லை. கோகுல் மனப்புயலைத் தணிக்கும் மார்க்கம் தெரியாமல் தத்தளித்தான். குமாரைக் கூப்பிட்டுச் சாப்பிட வற்புறுத்தினான். அவன் மறுத்தான். மனைவி' யின் மீதுள்ள ஆத்திரத்தைக் குழந்தை மீது காட்டவேண்டுமென்ற முறைப்படி, குமாரின் கன்னத்திலே கோகுல் ஓங்கி ஓர் அறை கொடுத்துவிட்டு, விர்ரெனப் பறந்துவிட்டான் அலுவலகத்திற்கு! 'அப்பா! ஏன் என்னை அடிக்க வேண்டும் ?' விடை காண முடியவில்லை அந்தப் பச்சைப் பாலகனால்! பேசாமல் எழுந்து பள்ளிக்கூடம் போய்விட்டான். மாலை. பத்திரிகை ஆபீசில் கோகுலுக்கு வேலை ஓடவில்லை. ஆறுமணி ஆகியும் நினைத்த கட்டுரையை எழுதி முடிக்க இயல வில்லை. மன நிம்மதியல்லவா எழுத்தாளனுக்கு முக்கிய மூல தனம் ? தொட்டுத் தொட்டு வளர்த்த தன் அருமைச் செல்வத்தை அறைந்து விட்டதை நினைத்து நினைத்து அவன் வெம்பினான். அவன் முதல் மனைவி, அவனெதிரே வந்து காலைப் பிடித்துக் கொண்டு அழுது, 'இனிமேலாவது நம் செல்வத்தை இப்படி அடிக் காதீர்கள்!' என்று கெஞ்சுவது போலிருந்தது ! போனில் மணி அடித்தது ; பேசினான். "குமார், பள்ளிக்கூடத்திற்குப் போனவன் திரும்பவேயில்லை ! பள்ளிக்கூடத்திலும் இல்லை! என்று வேலைக்காரன் தகவல்' கொடுத்தான். கோகுலுக்குத் தலை சுழன்றது. அறையைவிட்டு வெளியே ஓடிவந்தான். "குமார்!" என்று கத்தியபடி மாடிப் படியிலே கால் வைத்தான். உலகமே இருண்டுவிட்டது போன்ற உணர்ச்சி ! கண்களிலே பயங்கரமான சுழற்சி! கோகுல் கால் தவறியது ! கடகடவெனப் படிகளிலே உருண்டான். மாடிப்படி முழுவதும் இரத்த வெள்ளம் ! ஆஸ்பத்திரியிலே, கவலைக்கிடமான நிலைமையிலே கோகுல்! இதைக் கேட்ட கோமதி அலறித் துடித்துக்கொண்டு ஓடிவந்தாள். அவளை யாரும் உள்ளே அனுமதிக்கவில்லை. வெளியிலேயே உட்கார வைத்து விட்டார்கள். பிரக்ஞையே வரவில்லை. இன்னும் பத்து நிமிடத்தில் பிரக்ஞை வந்தால்தான் பிழைப்பான் இல்லா விட்டால் பிழைக்கமாட்டான். இப்படித் தகவல் தரப்பட்டது அவளுக்கு ! தன்னாலேயே - தன்னுடைய போக்கினாலேயே தன் கணவனுக்கு ஆபத்து வந்து விட்டது என்பதை உணர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/24&oldid=1699653" இலிருந்து மீள்விக்கப்பட்டது