________________
சாரப்பள்ளம் சாமுண்டி "சாரப்பள்ளம் சாமுண்டி" ஒரு கற்பனைக் கதைதான்! ஆனால். வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு வரையப்படும் ஒரு சித்திரம். கி.பி.1005 ஆம் ஆண்டு ! முதலாம் இராசராசன் தஞ்சை யில் 'இராசராசேச்சுரம்' என்னும் பெரிய கோயில் ஒன்றை எழுப்பு கின்ற முயற்சியில் ஈடுபடுகிறான். அந்தக் கோயில் வெறும் சமயத் திருப்பணி மட்டுமல்ல; அவன் பெற்ற வெற்றிகளின் நினைவுச் சின்னம்! அவன் உள்ளத்தில் சுடர்விட்டுக் கொண்டிருந்த கலை யார்வத்தின் எடுத்துக்காட்டு! கரிகால் பெருவளத்தான் காலத்தில் ஓங்கி உயர்ந்திருந்த சோழப் பேரரசு வீழ்ந்துவிட்டதென்று உலகம் முடிவு கட்டிய நேரத்தில் தஞ்சையில் விசயாலயச் சோழன், சோழமண்டலத்தில் புலிக்கொடியைத் தூக்கிப் பிடித்து நின்றான். அந்தக் கொடிக்குத் தலைவணங்கப் பல நாடுகளைத் தன் செங்கோலின் கீழ்க் கொண்டு வந்த பெருமை இரண்டாம் பராந்தகச் சோழனின் மகன் முத லாம் இராசராசனையே சாரும். கி.பி. 985 சூன் திங்கள் இருபத்தைந்தாம் நாள் இராசராசன் அரசுக் கட்டில் ஏறினான். முதிர்ந்த அரசியல் அனுபவங்களைப் பெற்று முடிசூட்டிக்கொண்ட காரணத்தால் இவன் ஆட்சியைப் 'பொற்காலம்' என்று வரலாறு வருணிக்கிறது. இவன் உருவாக்கி நிலைநிறுத்திய சோழப் பேரரசு இரண்டு நூற்றாண்டுகள் வரையில் பெருமையுடன் திகழ்ந்தது. பட்டத்திற்கு வந்த நான்கைந்து ஆண்டுகள் வரையில் போர் பற்றிச் சப்தம் எழவில்லை. சப்தம் கேட்கவில்லையே தவிரத் திட்டங்கள் தீவிரமாகத் தீட்டப்பட்டன. சோணாட்டைச் சுற்றியுள்ள சிற்றரசர்களையும், பிற வேந்தர் களையும் சோழப் பேரரசுக்கு உட்படுத்த வேண்டுமென்ற