________________
21 எண்ணங்கொண்டு செயலாற்றினான் இராசராசன். சுற்றியுள்ள மன்னர்களால் என்றைக்கும் சோழநாட்டுக்கு விபத்து ஏற்படக் கூடும் என யோசித்து அதை முன்கூட்டியே தவிர்க்கவேண்டி, நாட்டின் படை பலத்தைப் பெருக்குவதிலும், அரணை உறுதிப்படுத்துவதிலும் நாட்டு மக்களுக்கு எல்லாக் காலத் திலும், வளமான வாழ்வு அமையவேண்டும் என்பதிலும் தன் ஆற்றல் முழுவதையும் செலவிட்டான். அவனது மகன் இராசேந் திரன் ஒரு வேங்கைப் புலி. திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி களைக் குவிக்கக்கூடிய மாவீரன். இராசேந்திரனின் முதல் மனைவி யின் பெயர் பஞ்சவன் மாதேவி ; மனைவியிடம் கொண்டுள்ள அன்பின் காரணமாக தனக்குப் பஞ்சன் மாராயன் என்ற புனைப் பெயரைச் சூட்டிக்கொண்டான் போலும்! "மாராயம்" என்பது படைத் தலைவர்க்கு அரசனால் செய்யப்படும் சிறப்பு. இராசேந் திரன் முடி சூட்டிக் கொள்ளும் வரையில் சோழ நாட்டின் படைத் தளபதியாக இருந்து சோழப் பேரரசின் பரப்பளவை விரிவுபடுத்து வதில் சண்ணுங்கருத்துமாய் இருந்தான். தந்தையைப் போலவே இராசேந்திரனும் கலையார்வம் கொண்டவன். அந்தக் கலைச் செல் வத்தை அவனுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அமைந்தாள், மனைவி பஞ்சவன் மாதேவி. தந்தை, மகன் இருவரது திறமையும், இருவரிடையே ஆழமாய்" முகிழ்த்திருந்த அன்பும் சோழநாட்டை எஃகுக் கோட்டையாக. மாற்றிடவும் பயன்பட்டன. மணி முடி தலையில் இருக்கிறது ; மந்திரிப்பிரதானியர் பக்க: லில் இருக்கிறார்கள் ; மாளிகை இருக்கிறது ; மஞ்சம் இருக்கிறது ; மன்னர் என்ற பெயர் இருக்கிறது - இதுவே போதும் இகத்தில் இன்பம் பெற என எண்ணிக் கிடக்கும் மந்தமதி இராசராசனுக்கு இருந்திருக்குமேயானால் அவனது எல்லைகள் பறிபோயிருக்கக்கூடும். சோழ நாடு சுருங்கிச் சீர்குலைந்து போயிருக்க வழி வகுத்தவனாகி யிருப்பான். ஆனால், அவனோ எதிர்காலமுணர்ந்த அறிஞர் பெருந்தகை. பகைவர்களின் உளப்பாங்கு புரிந்துகொண்ட ராஜ தந்திரி. ஆகவேதான், அரணை வலுவாக்கிப் படையைப் பெருக் கிட நாலைந்து ஆண்டுகள் செலவிட்டான். அதன் பின்னர் எதிரி களைக் கணக்கிட்டான். யார் யாரைப் படைகொண்டு அழிக்க லாம்-யாருடன் நட்புப் பாராட்டலாம்-யார் யாரை வளர விடாமல் சோழ நாட்டுக்கு அடங்கி நடக்கச் செய்யலாம் என்ற தீர்க்கமான திட்டங்களையெல்லாம் சிந்தித்துச் செயல்பட முனைந் தான். பிறகு, புலிக்கொடிப் படைகள் புறப்பட்டன. பெரும் படைத் தலைவன் பதவியை ஏற்றுக்கொண்ட பஞ்சவன் மாராயன் எனும் இராசேந்திரனின் வீரவாள் சுழன்றது. மின்னல்கள் ஆயிரம்,