________________
22 கோடியென வெளிப்பட்டன. யொளியைப் பாய்ச்சின. அவை இராசராசனின் வெற்றி ஆனைப்படை, குதிரைப் படை, காலாட் படைகளுடன் கடற் படையும் கொண்டு மாற்றாரைச் சுற்றிவளைக்க மாமன்னன் இராச ராசனின் போர் முழக்கம் இடியென முழங்கியது. கி.பி. 989-இல் சோழர் படை, சேர நாட்டில் நுழைந்தது. சேரனுடன் இணைந்து நின்று பாண்டியன் அமரபுசங்கன் என்பானும் சோழரை எதிர்த் தான். காந்தளூர்ச்சாலை எனப்பட்ட துறைமுகப்பட்டினத்தில் நடைபெற்ற போரில் சேரரின் மரக்கலங்களையெல்லாம் சோழர் படை அழித்து வெற்றி கண்டது. சேர நாட்டை வென்ற இராச ராசன் அங்குத் தன்னுடைய பிறந்த நாளான ஐப்பசித் திங்கள் சதயநாளைக் கொண்டாடுமாறு செய்வித்தான். அங்கிருந்து பாண்டியன் அமரபுசங்கனை விரட்டிக்கொண்டு சோழப்படை புறப் பட்டது. விழிஞம் என்ற துறைமுகம் இராசேந்திரனால் கைப் பற்றப்பட்டது. இந்த இரண்டு நாடுகளுக்கும் மூண்ட போர் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நடைபெற்றிருக்கின்றது. பின்னர், குடமலை நாட்டு மன்னன்மீது தஞ்சை, பழி தீர்த்துக் கொள்ளக் கிளம்பியது. அந்த நாட்டிற்குத் தஞ்சையிலிருந்து அனுப்பப்பட்ட தூதன் கொல்லப்பட்ட செய்தி கேள்வியுற்ற சோழவேந்தன் இராசராசன் படைகொண்டு புறப்பட்டான். பெரிய காடுகள் பதினெட்டுக்கும் மேற்பட்டவைகளைத் தாண்டி, குடமலை நாட்டின் தலைநகரான வலிவுமிக்க உதகைப்பட்டினத்தை அழித்து வெற்றிமாலை சூடினான். குடமலை நாட்டு அரசன் மீனிசா போர்க்களத்தில் பெருவீரம் காட்டிப் போரிட்டான் என்பதை இராசேந்திரன் மூலம் அறிந்து, அந்த மீனிசாவுக்கு மாளவி என்ற நகரத்தை நன்கொடையாக வழங்கினான். கீழைச் சாளுக்கிய நாட்டில் அரசுக்கட்டில் யாருக்குச் சொந்தம் என்பதிலே பெருங் குழப்பம் மூண்டிருந்தது. சக்திவர்மன் என்ப வனும் அவன் மரபினரும் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டனர். இராசராசன் சக்திவர்மனுக்கு ஆதரவு காட்டி அவனது எதிரிகளை முறியடித்துக் கீழைச்சாளுக்கிய நாட்டுக்குச் சக்திவர்மனை அரசனாக்கி னான். சக்திவர்மனின் தம்பி விமலாதித்தனுக்கு இராசராசனின் மகள் சிறிய குந்தவையை மணம் செய்துகொடுத்துக் கீழைச் சாளுக்கிய நாட்டின் நட்பைப் பலப்படுத்திக்கொண்டது சோணாடு ! பின்னர், கலிங்கத்தில் நடந்த கடும்போரில் இராசராசன் வாகை சூடினான். கங்கைபாடியின் மீது போர் தொடுத்து, அதன் தலைநகரான தாலக்காட்டைப் பிடித்து, அதற்கு இராசராசபுரம் எனப் பெயர் மாற்றினான். அதே வேகத்தில் நுளம்பபாடி வீழ்ச்சி