பக்கம்:அரும்பு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 யுற்றது. தடிகைபாடியும் இராசராசனுக்குத் தலைவணங்கி நின்றது. அடுத்துக் கொல்லம் படையெடுப்பு ; கொடுங்கோளூர் மீது போர் ! இரு நாடுகளையும் அடக்கிக் 'கீர்த்திப்பராக்கிரமச் சோழன்' என்ற பட்டத்தைப் பெற்றான் இராசராசன். மேலைக் கடற்கரையோரத்து மன்னர்கள் அனைவரையும் அடக்க முனைந்து, இராசேந்திரன் படைகொண்டு சென்று, துளுவர், கொங்கணர் ஆகியோரைச் சிறைப் பிடித்தும், சேரரையும் தெலுங்கரையும் முறியடித்தும் சோழ பூமிக்கு ஒப்பற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தான். ஈழப்படையெடுப்பில் இராசராசன் பெற்ற வெற்றியின் அறிகுறியாக வட இலங்கைக்கு‘மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் சூட்டினான். இந்தப் போரில் அனுராதபுரம் ஆக்கம் அழிந் தது. "போலனருவா” என்ற இடத்தைச் சோழர் தலைநகராக இலங்கையில் அமைத்துக் கொண்டான் இராசராசன். "இராமன் இலங்கை செல்வதற்குக் குரங்குகளைக் கொண்டு பாலம் கட்டினான். ஆனால், இராசராசன் பாலம் கட்டாமல் படைகளைக் கப்பல்கள் மூலமாகக் கொண்டுசென்று, இலங்கை வேந்தனைக் கொன்றான். இதனால் இவன் இராமனைவிடச் சிறந் தவன்' என்று திருவாலங்காட்டுப் பட்டயம் பகர்கின்றது. மேலைச் சாளுக்கியப் பகுதியான இரட்டப்பாடியில் சத்தியாங் ரயன் என்ற பலம் வாய்ந்த மன்னனை இராசராசன் எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டான். அதில் சத்தியாங்ரயன் புற முதுகிட்டுப் பதுங்கிவிட்டான். என்றாலும் நாட்டை இழந்துவிட வில்லை. இராசராசன் இரட்டப்பாடி போர் மூலம் மிகுந்த பொன் னும் பொருளும் அடையப் பெற்றான். அந்த அளவற்ற செல்வத்தைக் கொண்டுவந்துதான் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கினான். முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கைப்பற்றி, 'மும்முடிச் சோழன்' என்ற புகழ்மாலையும் பெற்ற இராசராசனது வெற்றித் தூண் போல நிற்பதுதான் தஞ்சை இராசராசேச்சுரம் எனும் கலைக்கோயில் ! இராசராசனின் ஈடும் எடுப்பும் அற்ற வீரத்தோற்றம்போலவே அந்தக் கோயிலும் நிமிர்ந்து நின்று, பழந்தமிழ்ப் பெருவீரனின் போர்ப்பரணியையும் கலை முழக்கத்தையும் அரசியல் பேரொளி யையும் அவனிக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கோயிலை எழுப்புவதற்கு இராசராசன் தீட்டிய திட்டங்கள் எத்தனை ; எத்தனை ! அவன் எண்ணங்கள் அத்தனை யும் நிறைவேறியனவா ? அந்தக் கலைக்கோயிலில் அவன் காண வேண்டுமென்று விரும்பிய அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு விட்டனவா? இல்லை! அவன் எண்ணம் முழுதும் ஈடேறவில்லை ! ஏன் ஈடேறவில்லை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/29&oldid=1699660" இலிருந்து மீள்விக்கப்பட்டது