பக்கம்:அரும்பு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 கோயில் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதுபற்றித் தீவிர மாக யோசிக்கத் தொடங்கினார்கள். குந்தவையார், கோயிலுக்கு இராசராசேச்சுரம் எ ன்னும் பெயரே வழங்கப்பட வேண்டுமென்று கருத்து அறிவித்தார். “கோயிலுக்கு ஏழு வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். அங்குப் பதினான்கு வாயிற்காவலர் சிலைகள் அமைக்க வேண்டும்' என்றான் இராசேந்திரன். "இராசேந்திரனுக்கு எப்போதும் பாதுகாப்பைப் பற்றித்தான் அக்கறை ! இராசேந்திரா ! சிலைகள் கோயிலைப் பாதுகாக்குமா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டான் மன்னன். "சிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்று எனக்குத் தெரி யும். இருந்தாலும் அழகுக்காக இருக்கட்டும் என்றுசொன்னேன்.' -என்று பதில் கூறினான் இளவரசன். அவன் ஆசை ஒப்புக் கொள்ளப்பட்டது. "தோரணவாயில், திருமாளிகை வாயில், திருஅணுக்கன் வாயில் என்று மூன்று வாசல்களையும் பழைய முறைப்படியே அமைத்துவிடலாம் அல்லவா?” என்று கண்டராதித்தன் கேட் டான். மன்னன் 'சரி' என்று தலையசைத்தான். அதற்குள் குந்தவையார் குறுக்கிட்டு, "இல்லை; இல்லை. அந்த வாசல் பெயர் களில் மாற்றம் வேண்டும். இராசராசன், கேரளர்களுக்கு எமனைப் போன்றவன் என்பதற்கு அடையாளமாக முதற்கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன் வாசல் என்றும், இரண்டாவது கோபுர வாசலை இராசராசன் திருவாசல் என்றும் அழைக்க வேண்டும்" என்று கூறினார். அக்காளின் பேச்சை மறுத்துப் பேசிப் பழக்க மில்லாத இராசராசனும் வாளாயிருந்துவிட்டான். "கர்ப்பக்கிரகத்துக்கு மேலேயுள்ள விமானத்தை நல்ல உயரத் திலும் பதின்மூன்று கோபுர மாடிகள் கொண்டதாகவும் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறேன்" என்று கண்டராதித்தன் கூறியதை அனை வரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள். "அந்த விமானக் கோபுரத்தின் உச்சியில் வைக்கப்படும் ஸ்தூபிக்குடம் மூவாயிரம் பலம் எடையுள்ள செப்புக்குடமாக இருக்க வேண்டும். அதன்மேல் சுமார் மூவாயிரம் கழஞ்சு நிறை யுள்ள பொன்தகடு போர்த்த வேண்டும்." இராசராசன் இந்த ஆசையை வெளியிட்டபோது, குந்தவை யார் புன்னகையை நெளியவிட்டுத் தன் தம்பியை அருள் ஒழுகும் கண்களால் ஆசைதீரப் பார்த்துப் பரவசமுற்றார். "கோயிலில் சோழப் பேரரசின் சிறப்புக் குறிப்புக்கள்-வெற்றிச் செய்திகள் தாங்கிய கல்வெட்டுக்கள் செதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று குந்தவையார் கூறினார். "சிற்பிகளிடம் கூறி, கோயில் விமானத்தின் நிழல் தரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/32&oldid=1699665" இலிருந்து மீள்விக்கப்பட்டது